சாந்தா மரியா ஜேம்ஸ் - வளைகுடாவில் பன்முக தமிழக பெண் சாதனையாளர் ! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சாந்தா மரியா ஜேம்ஸ் - வளைகுடாவில் பன்முக தமிழக பெண் சாதனையாளர் !

மார்ச் 23,2020  IST

Comments (1)

ஒரு பெண் எத்தனை திறமைகள் பெற்றிருக்க முடியும்? எத்தனை துறைகளில் பரிணமிக்க முடியும்? திறமைகள் உள்ள அத்தனையிலும் வெற்றி பெற முடியுமா? முடியும் என்பதற்கு டாக்டர் சாந்தா மரியா ஜேம்ஸ் ஒரு முன்னுதாரம் ! இவர்- பள்ளி முதல்வர்-- சமூக சேவகி- பள்ளி ஒன்றின் சேர்மன் -- ஜனாதிபதி விருதோடு 40 க்கும் அதிக அங்கிகாரங்களை பெற்றிருப்பவர் .சென்னையில் பிறந்து வளர்ந்து திண்டுக்கல் வாசியான சாந்தா-- கிண்டர் கார்டன் ஆசிரியராக மாண்டிசரி பள்ளியில் அடி எடுத்துவைத்து-- ஆசிரியர் - ஒருங்கிணைப்பாளர் - துணைத்தலைவர் - தலைவர் என்ற சீரான வளர்ச்சி கண்டு -- இன்று- குவைத்தில் 5000 மாணவர்களைக் கொண்ட பிரபல இந்தியன் சென்ட்ரல் ஸ்கூலின் பிரின்சிபால் !. 

இந்தியாவிலும் இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றின் சேர்மன்!கல்வியும் ஆய்ந்தறிவும் இவரது பலம் . MA ,MEd,Phd ( in educational leadership )--இவற்றுடன் uk ,usa ,Finland & astralia வில் கற்பிக்கும் பயிற்சி பெற்றவர்.2006 ஆம் ஆண்டில் குவைத்தின் இந்திய சென்ட்ரல் பள்ளி(ICSK) -யில் முதல்வராக சேர்ந்தார். அங்கு சேர்ந்த சமயத்தில் 2500 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய பெருமை இவருக்குண்டு .


படிக்கும் ஆர்வத்தை உருவாக்க


சாந்தா ,தனது பள்ளி குழந்தைகள், படிப்பை வெறுப்பாக பார்க்காமல் , இஷ்டப்பட்டு கற்க வேண்டும்-- அதுவும் சுயமாக படிக்கும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்படுபவர். ஐந்தில் வளைக்காவிட்டால் ஐம்பதில் வளைக்க இயலாது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களை ஈடுபாட்டோடு கற்க வைப்பது இவரது சிறப்பு.'வெற்றி என்பது ஒரு பயணம். அதில் முடிவே கிடையாது !. இலக்குகள் மாறமாற தன் பயணமும் தொடர்கிறது!'.என்கிறார் சாந்தா . தோல்வியை கண்டு துவண்டு விடாமல் - எப்போதும் விசால பார்வை! கூரிய செயல் திட்டம்! எடுத்த காரியத்தில் பலன் கிடைக்கும் வரை விடா முயற்சி..!..கடுமையான உழைப்பு என்பது இவரது தாரக மந்திரம்.

வாழ்க்கை முழுக்க தான் பட்ட கஷ்டங்கள், சந்தித்த சோதனைகள் ....அவற்றிலிருந்து மீண்டு வந்த அனுபவங்கள் இவரை புடம் போட்டிருக்கின்றன. ஒரு வலிமையான பெண், தான் கற்றுக்கொண்ட படிப்பினைகளை ஒருபோதும் மறக்க மாடடாள் . மன உறுதியோடும் லட்சிய கனவுகலோடும் ஒருஆளுமையாக உருவாக முடியும் என்பதை இவர் நிரூபித்திருக்கிறார். சாந்தாவை யாரும், எப்போதும் அணுகலாம். அத்தனைக்கு எளிமை! தங்கள் பிரச்சனைகள்--கஷ்ட நஷ்டங்களை இவருடன் பகிர்ந்துக்கொள்ளலாம். அதன் பின் உற்சாகமமும் மகிழ்ச்சியும் வந்தவர்களுக்கு கிடைக்கும் என்பது கேரண்டி ! அத்தனை நேர்மறை சிந்தனை! எப்போதும் புன்னகையும் மலர்ச்சியும் இவரது சிறப்பு.

சாந்தா,சந்தோஷத்தை வெளியே தேடவேண்டாம்- நமக்குள்ளேயே அதை உருவாக்க முடியும் என்று செயல்படுபவர்.செயல்பட வைத்து பெண்களின் முன்னேற்றத்துக்கும் ,மறுமலர்ச்சிக்கும் பாடுபடுபவர். முறைப்படி முயன்றால்--பெண் நிச்சயம் தவிர்க்க முடியாத சக்தியாய் உருவெடுக்கலாம் என ஊக்கம் கொடுத்து தூக்கிவிடுபவர்.பெண்கள் தங்கள் மன வளத்தை மட்டுமின்றி உடல் வளத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் . பெண்கள் தங்களை சுற்றியுள்ள கூண்டிலிருந்து வெளியே வர வேண்டும்-- சுதந்திரமாய் இருக்க வேண்டும் -- உலக அளவிலான சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்று எப்போதும் வழி காட்டுவார்.இவரது கடின உழைப்பும் செயல்திறனும் முறையாய் அங்கீகரிக்கப்பட்டு, வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து இந்திய பள்ளிகளின் கவுன்சிலிங் செகரட்டரி மற்றும் வளைகுடாவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளின் முன்னாள் தலைவரும் கூட!.

அதேபோல் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சொற்பொழிவு, வெர்சிஃபிகேஷன், கட்டுரை, வினாடி வினா, நடனம், இசை மற்றும் ஸ்கிட் ஆகியவை இவருக்கு கைவந்த கலை! ஆங்கிலத்தில் மழலையர் பள்ளிக்கு Study Materials மற்றும் , சமூக ஆய்வுகளுக்கான புத்தகங்கள் என அனைத்து மட்டங்களிலும் எழுதியுள்ளார்.இவர், அறிவு மற்றும் திறன் செயல்பாடுகளை செய்து வ ஜ்ருபவர்.அவைகள் குவைத் மற்றும் இந்திய வானொலி-தொலைக்காட்சி,மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன.


விரிவாக்கப்பட்ட செயல் திறன்கள்

சாந்தா தன் களத்தை கல்வியோடு நிறுத்திக்கொள்ளவில்லை .குவைத் -த்ரோபால் சங்கத்தின் தலைவராகவும், இந்திய பெண்கள் சங்கத்தின் செயலாளராக- -.இந்தியன் ப்ரண்ட்லைன்ஸ் சேவை அமைப்பின் தலைவராக இவரது செயல் திறன்கள் விரிவாக்கப்பட்டுள்ளது .இவரது அடுத்த விஷேச செயல்பாடு-- தொண்டு நிறுவனங்களுக்கு கைகொடுப்பது.ஓய்வு நேரத்தில், மாணவர்களை குழுக்களாக ஏற்பாடு செய்து, குவைத்தில் உள்ள உடல் மற்றும் மனநலம் பாதித்த முகாம்களுக்கு சென்று சேவை செய்ய வைக்கிறார். 

 உடல் உறுப்பு தான முகாம்கள், சர்க்கரை வியாதிக்கு எதிரான போராட்டம், மார்பகப் புற்றுநோய் சிகிச்சை முகாம், அத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வுவுக்கு குவைத்திலும், இந்தியாவிலும் துணையாயிருக்கிறார். அடுத்து அனைவரும் ஆச்சர்யப்படும்படி இவர் ஒருசிறந்த அத்லெட்! கிரிக்கெட், கபடி,பாரத் scout மற்றும் கைப்பந்து …வரை மாநில மற்றும் பிராந்திய மட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அள்ளிக் குவித்த விருதுகள்ஜனாதிபதி திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் கையில் 2013 ல் நல்லாசிரியர் விருதுடன் --சிறந்த கிராமப்புற கல்வி மேம்பாட்டு பங்களிப்புகாக 2003 ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைகளால் விருது; 2005ல் சிறந்த முதல்வருக்கான விருது; 2004 ல் ஷேக்ஸ்பியர் விருது ; 2005ல் அரசின் விளையாடு விருது; 2006ல் ஷேக்ஸ்பியர் விருது; 2008ல் குவைத் அரசின் மின்சாரம் மற்றும் நீர் மேலாண்மைத்துறை துறை விருது ; 2011ல் குவைத் அரசின் கல்வி துறையால்(MOE) கவுரவம் மற்றும் சான்றிதழ்; --- என இன்றளவும் 40க்கும் மேற்ப்பட்ட விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். விருதுகள் இன்னமும் இவரை துரத்துகின்றன 

சாந்தா, தன் வெற்றிக்கு குடும்பத்தாரின் பங்களிப்பு மிக அதிகம் என பெருமைப்படுகிறார். இவரது கணவர் திரு. ஜேம்ஸ், ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் விஞ்ஞானி! மகள்- நான்சிகார்த்திக், மருமகன், மற்றும் அன்பான பேரக்குழந்தைகள் என நல்லதொரு குடும்பமாக நிறைவான வாழ்க்கை -இவருக்கு.! உற்றார் -உறவினர்களின் பேராதரவு, பெற்றோரின் அன்பு, கடவுளின் ஆசீர்வாதம் என அனைத்தும் தன் வெற்றிக்கு காரணம் என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார் .எதிர்கால இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து மாணவர்களை வளபடுத்தி -- நேர்மையான தலைவர்களையும் - திறன்மிக்க தொழிலதிபர்களையும் உருவாக்க வேண்டும் என்பது இவரது லட்சியம் !


-NCM with HariAdvertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Girija - Chennai,India
24-மார்-202001:18:47 IST Report Abuse
Girija சாண்டா மரியா என்பது செந்தாமரை என்ற தமிழ் பெயர்தான் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us