கொரோனா பாதிப்புக்குத் தீர்வு காண தாம்பா உதவி குழு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொரோனா பாதிப்புக்குத் தீர்வு காண தாம்பா உதவி குழு

மார்ச் 24,2020  IST

Comments

சென்ற 3 மாதங்களுக்கு மேலாக கொரானா கோவிட்- 9 என்னும் கொடிய தொற்றுண்ணீ உலகையே மிரள செய்து வந்துகொண்டு இருக்கின்றது. உலகமே இதுவரை இதுபோல் இவ்வளவு பெரிய இயற்கை இடைப்பாட்டை மற்றும் இன்னல்களை இனம், மதம், மொழி, பணம், பதவி, புகழ், மேன்மை, தாழ்மை மற்றும் இன்ன பிற எந்த பேதமும் இன்றி அனைத்து நாட்டு மக்களையும் உலுக்கி கொண்டு உள்ளது. இந்த கொடிய நோய்யை சரிசெய்ய இது வரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வாளர்கள் உலகெங்கும் இதற்கு தீர்வு காணும் பொருட்டு இரவும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர். 

உலகத்தில் உள்ள அனைத்து மருத்துவ ஆலோசகர்களும், செவிலியர்களும், பரிசோதனையாளர்களும் மற்றும் மருத்துவ துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் அவர்களின் உயிரை பணயம் வைத்து இதனால் பாதிக்கபட்ட மக்களுக்கு தீவிர பரிசோதனைகளும் மற்றும் சிகிச்சைகளும் அளித்து வருகின்றனர். அவர்களின் தன்னலமற்ற சேவைகளுக்கு இருகரம் கூப்பி வணங்குகிறோம். 

இங்கு தாம்பாவில் உள்ள இந்தியர் மற்றும் அனைவருக்கும் உதவும் வகையில் Tampa Aid Network (தாம்பா உதவி குழு) என்ற தன்னார்வற்ற குழுவினை மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ள உள்ளங்களை இணைத்து தேவையானவர்களுக்கு உதவி செய்ய இந்த இயற்கை சீற்றத்தின் நேரத்தில் முயற்சி எடுத்து உள்ளோம். எங்களுடைய இணைதளம் www.facebook.com/TampaAidNetwork மற்றும் ட்விட்டர் @AidTampa ஈமெயில் tampahelpsetf@gmail.com. எங்களால் முடிந்தவை எங்களுக்கு தெரிந்தவரை எங்களுக்கு கிடைக்கும் பயனுள்ள தகவல்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து கொண்டு உள்ளோம். 

இதே போன்று உங்கள் நகரத்திலும் உதவி குழு அமைத்து அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்ய வேண்டுகிறோம். இந்த நேரத்தில் இந்த கொடிய நோய் பரவாமல் தடுக்க மற்றும் இருக்க அனைவரும் அவரவர்களுடைய நாட்டின், மாநிலத்தின், நகரத்தின் சட்டஒழுங்கு உத்தரவுகளை மதித்து உங்களையும் மற்றும் உங்களை சார்ந்து உள்ள அனைவரையும் காத்து கொள்ள தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இந்த இயற்கை பேரிடரில் இருந்து அனைவரும் மிகவிரைவில் மீண்டுவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். நன்றி வணக்கம்.


- நமது செய்தியாளர் ரமேஷ் வாசுதேவன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us