ஆனந்தி நடராஜன்- ஜெயிக்கவே பிறந்தோம் என்று பிரமிப்புடன் செயல்படும் வளைகுடா தமிழச்சி ! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆனந்தி நடராஜன்- ஜெயிக்கவே பிறந்தோம் என்று பிரமிப்புடன் செயல்படும் வளைகுடா தமிழச்சி !

மார்ச் 30,2020 

Comments

பெண்களின் சக்தி அபராமானது. அவர்களது திறமை- பலம்- சாமார்த்தியம்- துணிச்சல் போன்றவற்றை ஆண்கள் என்றில்லை- பெண்களில் பலரும் கூட அறிவதில்லை என்பது உண்மை.குடும்பம், குழந்தைகளை கவனித்துக்கொள்வதிற்குமப்பால் கலை, இலக்கியம், இவற்றுடன் வணிகத்திலும் முன்னணி வகிக்கும் பெண்களில் குவைத்தில் வசிக்கும் திருமதி. ஆனந்தி நடராஜனும் ஒருவர்.வேகம் - விவேகம் - அஞ்சாமை - ஒரு காரியத்தை தொட்டுவிட்டால் அது வெற்றிபெறும் வரை ஓயாமை!குழுவினரை அரவணைத்து செயல்பட வைக்கும் பக்குவம் - சாமர்த்தியம் ! எந்த பிரச்னை என்றாலும் அதை நேரிடும் ஆற்றல் ! மேடை பேச்சு ! கலைகளின் மேலுள்ள ஆர்வம் - அவற்றை வளர்க்க உதவும் பாங்கு!. இவற்றுடன் விருந்தோம்பல் ! எப்போதும் கலகல பேச்சு - என ஆனந்தி பற்றி நிறையச் சொல்லாம்.குவைத்தில் வணிகம் மட்டுமில்லாமல் சமூக ஆர்வலராகவும் பிரமிப்புடன் செயல்படும் ஆனந்தி ஒரு தமிழச்சி! சென்னை பச்சையப்பா கல்லூரியில் MA (Economics) படித்தவர்.தாய் திருமதி லீலா சுந்தர் மூலம் பாலுடன் 'ஊக்கம், உழைப்பு, மனோபலம்,விடா முயற்சி, தளராதே--தயங்காதே எனப் பலதும் ஊட்டி வளர்க்கப் பட்டது இவரது பலம்.சவாலே....சமாளி! ஆனந்தி பள்ளி - கல்லூரிகளிலேயே... படிப்போடு ஏதாவது சாதிக்கணும் - என்று பரபரப்புடன் செயல்படுபவர் . இசை, நடனம், பேச்சு என எந்த போட்டி என்றாலும் பரிசுகளை குவிப்பவர்.

ஆனந்தியின் விரைவாய் விஸ்வரூபம்
தாய்க்கு அடுத்து கணவர் திரு. ஏ. என் நடராஜனின் சக்திவாய்ந்த சத்தான ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் திருமணத்திற்குப் பிறகு இவரது திறமை வளர ஆரம்பித்தது.தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் கணவர் பணிபுரிய, அங்கு ஸ்பிக் நகரில் ஆனந்தி விரைவாய் விஸ்வரூபம்! ஸ்பிக் நகர் போல ஒரு மிடுக்கான, சிறப்பான கட்டமைப்பை பார்ப்பது அபூர்வம். அங்கு தோட்டக்கலை, வீட்டு பராமரிப்புக்கலை என எப்போதும் இவருக்கு முதல் பரிசு !
வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை வெளியில் பிறரிடமிருந்தும் வரலாம். நம் உள்ளிலிருந்தும் உந்தப்படலாம். இதில் இரண்டாம் ரகமாய் 'ஜெயிக்கவே பிறந்தோம்' என்கிற நெஞ்சுரத்திலேயே செயல்பட்டு வருபவர் ஆனந்தி நடராஜன்.தன் நிர்வாகம்,மற்றும் தலைமை ஏற்கும் பணப்பை வளர்த்துக் கொள்ள அங்கு இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அங்கு பெண்கள் குழுத்தில் சேர்ந்து செயலாளராக கலை- கலாச்சார காரியங்களைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தார். தொண்டோடு வாழ்க்கை ! பிறகு லயன்ஸ் லேடிஸ் கிளப்! அங்கும் செயலாளர்--தலைவர்-- அசோசியேட் chair person ( for lions Dt-324B) என எல்லைகள் விரிவாகி--- லயன்ஸ் மூலம் கலாச்சாரத்துடன் தொண்டிற்கும் நேரத்தை ஒதுக்கினார். மாற்றுத்திறனாளிகள் இல்லம், திண்டுக்கல்லில் காந்தி ஆசிரமம் போன்றவற்றில் விசேஷ நாட்களுக்குச் சென்று நாள் முழுக்க அங்கேயே இருந்து அவர்களுக்கு சேவையாற்றுவார். கணவர் நடராஜனின் குவைத் பணி மாற்றத்தின் மூலம் - 1994ல் குவைத் வந்து இங்கும் ஆனந்தியின் சமூக செயல்பாடுகள் தொடர ஆரம்பித்தன.பல கலாச்சார தமிழ் அமைப்புகளுக்கு பக்க பலமாகவும், குவைத் தமிழ்ச்சங்கம் மற்றும் இந்தியன் ப்ரண்ட்லைனர்ஸ் சேவைஅமைப்பிற்கும் தலைவராகவும் இருந்திருக்கிறார்.எல்லையில்லா லட்சியம் :ஆனந்தி தன் லட்சியத்திற்கு எல்லை வைத்துக்கொள்வதில்லை. ஒன்று அடைந்தால் அடுத்தது – அடுத்தது!கலாச்சாரம் - சமூக தொண்டு - இவற்றுக்கப்பால் ஆனந்திக்குள் - இது போதாது என நீண்ட நாட்களாக வணிக தாக்கம் இருந்துக்கொண்டிருக்க, சென்னை கோடம்பாக்கத்தில் 'MAGNA' என பல்பொருள் அங்காடி ஆரம்பித்தார். ஒரு பெண்ணாக, இரவு பகல் பாராமல் அதை நிர்வகித்து அதிலும் வெற்றி ! அத்தோடு தனது சகோதரர் Dr. பாலசுப்ரமணியத்தின் ஆஸ்பத்திரிக்கருகில் - சத்தான உணவு கூடம் ஆரம்பித்து அது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அத்துடன், பணம் சம்பாதிக்க மட்டுமில்லாது தனக்கென்று குவைத்தில் ஒரு தொழில் இருந்தால் - அதன் மூலம் பல சமூக சேவைகளுக்கும் கைகொடுக்கலாம்.... என்ன தொழில் செய்யலாம் என யோசித்தபோது சரவணபவன் ஹோட்டல் கைகொடுத்தது.பல வருடங்களாக பலரும் முயற்சித்து நிறைவேறாத சரவணபவனை ஆனந்தி - குவைத்தில் ஆரம்பித்து குறுகிய காலத்தில் அது மூன்று கிளைகளாகியிருக்கிறது.அசைவ உணவு நாட்டில் வெற்றிகரமாய் சைவ உணவகம்! இதன் வருமானம் பல தமிழ் அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளது.
ஆனந்திக்கு மட்டுமில்லை அவரது மகள் ஆர்த்தி சித்தார்த்துக்கும் வணிக ரத்தம்! பொறியாளரான அவர் வெப் போர்டல், சேலை டிசைன், ஃபேஷன் பொருட்கள், Life style என இறங்கி கோலோச்சி வருகிறார். தன்னம்பிக்கை, மனோபலம், விடாமுயற்சி, தொண்டு, விருந்தோம்பல், ஊக்கம் - உறுதி எல்லாம் இவரை உயரத்திற்கு கொண்டு போயிருக்கிறது.ஆனந்தி ஒரு பெண்ணாக - உயரத்தைத் தொட்டிருப்பதை பாராட்டி, அமெரிக்காவின் உலகத் தமிழ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது.ஆனந்தியின் பயணம் இத்துடன் நிற்கவில்லை. அடுத்து என்ன--.. .எப்போ - எங்கே... வெற்றிக் கொடி கட்டலாம் என்கிற உத்வேகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
--NCM with Hari

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us