ஜனரஞ்சகமாய் நடந்த 'ஜனரஞ்சனி இசைக்குழுவினரின் இசை விழா' | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜனரஞ்சகமாய் நடந்த 'ஜனரஞ்சனி இசைக்குழுவினரின் இசை விழா'

ஏப்ரல் 05,2020 

Comments

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்- குறள்

(நல்ல பண்பு உடையவர்களின் ஒழுக்கத்தால் உலகம் நடைபெறுகின்றது; அவர்கள் இல்லையென்றால் உலக ஒழுக்கம் மண்ணில் புதைந்து மறைந்துவிடும்.)

மில்டன் கேன்ஸில் [North Of London] ஜனரஞ்சனி என்ற இசைக் குழுவினர் அண்மையில் அறச்சிந்தனையை மையப்படுத்தி ஓர் இன்னிசை நிகழ்ச்சியை ஷென்லி ப்ரூக் எண்ட் பள்ளியில் [Shenley Brook End School} சுமார் மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாக நிகழ்த்தினர். பள்ளிச் சிறுவர்கள் பல்வேறு இந்திய மொழிகளில் இன்னிசைப் பாடல்களைப் பாடிப் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சிறார்கள் தமிழ் மொழியில் பாடல்களைப் பாடி அசத்தினர். சின்னச் சின்ன முருகா முருகா,போ சம்போ, பொம்ம பொம்மதா,ஜெய ஜெய தேவி போன்றவை பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்த பாடல்களாகும்.

நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட்ட ஓம் சிவோஹம் பாடல் பார்வையாளர்களின் கரகோஷத்தை அள்ளியது. அதில் குழந்தைகளால் சொல்லப்பட்ட ருத்ரம் ‘ஒன்ஸ் மோர்’ கேட்க வைத்தது. நிகழ்ச்சியினை மெருகூட்டப் பக்கவாத்தியக் கலைஞர்களின் ஒத்துழைப்பு அலாதியாக இருந்தது.புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் திரு.விஸ்வநாதன் குழந்தைகளின் பாட்டிற்கு அனுசரணையாக வயலினை இசைத்து நிகழ்ச்சியைத் தூக்கி நிறுத்தினார் என்றே கூறலாம். மின்னணு டிரம்ஸ் [electronic Percussion] வாசித்த திரு.ரெங்காவின் விரல்கள் மந்திரம் செய்ததோ என்று பார்வையாளர்களை வியக்க வைத்தது. வித விதமான ஒலிகளை இசைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்திரு.நரேஷ் குமாரின் மிருதங்கம், மாஸ்டர் ப்ரணவ் மகேஷ், மாஸ்டர் அமோக் விஸ்வகர்மா ஆகியோரின் கீ போர்டும் குழந்தைகளின் இசைக்கு ஏற்ப அருமையாக இணைந்து நிகழ்ச்சியைப் பரிமளிக்க வைத்தது.

திருமதி.ஜனனி மகேஷ் அவர்கள் பாடிய நம்பிக் கெட்டவர் எவரய்யா என்ற பாபநாசம் சிவன் பாடலுக்கு மாஸ்டர் ப்ரணவ் மகேஷ் தன் கீ போர்டு மூலம் ஹிந்தோள ராக தேவதையைக் கண் முன்னே நிறுத்தினார் என்றால் அஃது மிகையல்ல. திருமதி.கவிதா விநோத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்தளித்தார்.நிகழ்ச்சிக்கு மில்டன் கேன்ஸின் மேயர் மற்றும் டேட்டன்ஹோ வார்டு கவுன்சிலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று குழந்தைகளைப் பாராட்டினர்.

நிகழ்ச்சியின் மூலமாகக் கிடைத்த தொகையினை மில்டன் கேன்ஸில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கும், மில்டன் கேன்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் புற்று நோய்ப் பிரிவின் கட்டிட மேம்பாட்டிற்கும் ஜனரஞ்சனி குழுவினர் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.மிகச் சிறந்த காரியத்திற்காக பெரும் மனதோடு இசை நிகழ்ச்சி நடத்திய இக்குழுவிற்கு தினமலர் சார்பாக வாழ்த்துக்கள்!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us