கொரோனா நேரத்தில் வடஅமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொரோனா நேரத்தில் வடஅமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள்

ஏப்ரல் 07,2020 

Comments

 நல்லதையே நினைப்போம்! நல்லதையே செய்வோம்!நல்லதே நடக்கும் ! அனைவருக்கும் வணக்கம், கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் மக்கள் அச்சமுற்றுக் கிடைக்கும் இந்த வேளையில்,நோயினைப் பற்றிய அச்சத்தினை எவ்வாறு நேர்மறையான செயல்கள் மூலமாகச் சற்றே குறைக்கலாம் எனப் பல நாடுகளின் அரசுகளும்,தனியார் நிறுவனங்களும் பல புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளது. அவற்றில் சில குறிப்பிட்ட முயற்சிகளை இங்கே காணலாம் . 

1.வீட்டில் அடைந்து கிடைக்கும் மனிதர்கள் பொழுது போக்குவதற்கும் ,மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் நல்லதொரு அறிவு விருந்தாக அமேசான் நிறுவனம் தனது 'கிண்டில்' செயலி மூலம் புத்தகங்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியைச் செய்து கொடுத்துள்ளது,இது படிக்கும் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமல்லாமல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. https://www.amazon.com/free-kindle-books/s?k=free+kindle+books 

2. கொரோனா ஊரடங்கு உத்தரவால் உலகெங்கிலும் பெரும்பாலான பள்ளிக் குழந்தைகளுக்கு இணையவழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றது.வட அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரத்தில் பள்ளிகள் இணையவழிக் கல்வியைத் தருவதோடு,சில ஆசிரியர்கள் குழந்தைகள் மனந்தளராமல் இருக்க அவர்களுடன் நேரடி பல்வழி இணைப்பின் மூலம் வாரம் இரு முறை இணைகின்றார்கள்.அமெரிக்காவில் நடக்கும் தமிழ்ப் பள்ளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல,எடுத்துக் காட்டாக கம்மிங் தமிழ்ப் பள்ளி ஒரு படி மேலே சென்று மாணவர்கள் கதை வசிக்கும் ஒளிப்பதிவை முகப்புத்தகத்தில் பகிர்ந்து குழந்தைகளை இக்கட்டான இவ்வேளையில் மகிழ்விக்கின்றனர். 

3.வட அமெரிக்காவில் உள்ள வீட்டுப் பொருட்களை விற்கும் இந்திய மற்றும் அமெரிக்க பலபொருள் விற்பன்னர்களும் இணையவழியில் காய்கறி பால் போன்ற இன்றியமையாத பொருட்களை நாம் வாங்க வழிவகை செய்துள்ளனர்.கொரோனா அச்சத்தால் வெளியே செல்ல அச்சப்படும் மக்களுக்கு இது ஒரு சிறந்த உதவியாகும். 

4.மக்களை நேர்முகப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களும் பல வகையான நிகழ்ச்சிகளை மக்களுக்காகச் செயல்படுத்துகின்றனர்,எடுத்துக் காட்டாக அட்லாண்டா மாநகரின் 2020 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்க உறுப்பினர்களும்,தன்னார்வலர்களும் இணைந்து தமிழே அமுதே ,கதை கேட்கலாம் வாங்க,திருக்குறள் நேரம் போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டும் ,அதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டும் உள்ளது தமிழ் மக்களிடையே நிறைவினைத் தருகின்றது. கொரோனாவின் அச்சம் ஒருபுறம் இருக்க,வீட்டிலே குழந்தைகளுடன் நேரம் செலவிடப் பெற்றோர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கிறது,இதனால் குடும்பத்திற்குள் ஒரு இணக்கம் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 

மேலும்,நமது இந்தியாவின் பிரதமர் இரவு 9 மணிக்கு அனைவரையும் விளக்கேற்றச் சொன்னதை இன்று இரவு வட அமெரிக்காவிலும் பலர் பின்பற்றினர்,பிரதமர் கைதட்டச் சொல்வதையும்,விளக்கேற்றச் சொல்வதையும் குறை கூறாமல்,மக்களின் அச்சத்தைப் போக்க அவர் கூறும் சிறு வழி முறைகளாக எண்ணி நேர்மறை எண்ணத்துடன் ஏற்றுக் கொள்வோம். இந்த நேரத்தில் காவல்துறையினரும்,மருத்துவ பணியாளர்களும்,அரசு ஊழியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காக உழைக்கின்றனர்,நாமும் அவர்களுக்கான மரியாதையைத் தருவோம். 

வெளிநாடுகளில் அமர்ந்து கொண்டு,நமது நன்மைக்காக ஊரடங்கு போட்டிருக்கும் நேரத்தில் அதை மீறுபவர்களை ஒரு சில காவல் துறையினர் அடிப்பதையும்,சிலர் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்திக் காட்டுவதையும்,அரசு எடுக்கும் புது முயற்சிகளைக் கேலி செய்வதையும் தவிர்த்து நம்மாலான பங்களிப்பை நாம் நல்குவோம்,விரைவில் நல்லதொரு விடியல் நமக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் பிறக்கப் போகும் நாளையை எதிர்கொள்வோம். நன்றி!


- தினமலர் வாசகி பிரதீபா பிரேம்குமார், அட்லாண்டா, ஜார்ஜியா


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us