சிங்கப்பூர் ஆலயங்களில் முகநூல்வழி வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஆலயங்களில் முகநூல்வழி வழிபாடு

ஏப்ரல் 07,2020 

Comments

கொவிட் 19 - கிருமித் தொற்று சமூக வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. தனிமைப்படுத்தல் - இடைவெளி விட்டு இருத்தல் போன்ற கட்டுப்பாடுகளை அரசு மக்கள் நன்மைக்காக வகுத்து வருகிறது. ஆலயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசாணைக்கிணங்க பக்தர்கள் வழிபாடுகளில் நேரடியாகக் கலந்து கொள்ளுவதில்லை. ஆனால் இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பம் எங்கிருந்தாலும் எதை வேண்டுமானாலும் தரும் காமதேனுவாகத் திகழ்கிறது. ஆலயங்களில் நடைபெறும் வழிபாடுகளை இல்லங்களிலிருந்தே கண்டு களித்து வழிபட்டுத் திருவருள் பெறுகின்ற வசதியை ஆலய மேலாண்மைக் குழுக்கள் ஏற்படுத்தித் தந்துள்ளன. 

சிங்கப்பூர் பிரபல சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீராம நவமி மகோற்சவம் இத்தகு முகநூல் வழியே பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வைகானஸ ஆகம வழிபாட்டு நெறிகளில் பழுத்த அனுபவம் மிக்க ஆலயத் தலைமை அர்ச்சகர் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்ரீ ராமநவமியை ஒட்டி ஸ்ரீ ராமர் திருமஞ்சனத்தையும் 3 ஆம் தேதி ஸ்ரீ மகாலட்சுமித் தாயாருக்குத் திருமஞ்சனத்தையும் நடத்தி வைத்ததைக் கண்கொள்ளாக் காட்சியாக பக்தப் பெருமக்கள் அவரவர் இல்லங்களிலிருந்தவாறே தரிசித்து மகிழ்ந்தனர். 

இதே போல 5 ஆம் தேதி சுக்லபட்ச பிரதோஷ அபிஷேகம் - அலங்காரம் மகா தீபாராதனைகளும் முகநூல்வழி நேரலையாகத் திரையிடப்பட்டது. நூற்றுக் கணக்கான பக்தர்கள் அவரவர் இல்லங்களிலிருந்து தரிசித்ததோடு ஆலய நிர்வாகத்தையும் அர்ச்சகர்களையும் பாராட்டி வாழ்த்தினர்.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us