சுப்பையா ராமதாஸ்- வளைகுடாவில் ஆர்ப்பாட்டமில்லாசேவை மற்றும் வணிகவித்தகர் ! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சுப்பையா ராமதாஸ்- வளைகுடாவில் ஆர்ப்பாட்டமில்லாசேவை மற்றும் வணிகவித்தகர் !

ஏப்ரல் 10,2020 

Comments

  கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து இருப்பதால், அந்த கஷ்டங்கள் பிறருக்கும்வந்து விடக் கூடாது என்று தன்னால் முடிந்த உதவிகளையும் , வேலை-வாய்ப்புகளையும் செய்து தருபவர் :-- கத்தார், குவைத், ஓமான் மற்றும்மலேசியாவில் வெற்றிகரமாய் செயல்பட்டுவரும் GTC யின் (Global Technology Co ) CEO திரு சுப்பையா ராமதாஸ்.
இவர் தமிழ்நாட்டின் சிவகாசி அருகே துரைசாமிபுரம் எனும் கிராமமத்தைசேர்ந்தவர்.விவசாய குடும்பம்! மெரிட்டில் பொறியியல் சீட்கிடைத்திருந்தும் கூட குடும்ப பொருளாதாரம் காரணமாக அதை இவர் தவிர்த்து B.Sc (Chem) படிக்க வேண்டியதாயிற்று.
ராமதாஸின் தந்தை சுப்பையா இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்ற Ex Serviceman!

ராமதாஸ் டிகிரி முடித்து 1980ல் தோலை தொடர்பு துறையில் (DOT) ஜூனியர் என்ஜீனியராக சேர்ந்தார். அதன் மூலம் டெல்லி, சண்டிகர், பஞ்சாப், பீகார், ஹைதிரபாத் என பல இடங்களிலும் பணிபுரிந்ததால் இவருக்கு அகிலஇந்திய அளவில் பல மனிதர்கள்--கலாச்சாரங்கள் -- பல மொழிகளையும் கற்றுக் கொள்ள முடிந்தது . அந்த அனுபவம் நிர்வாக திறனில் இவருக்கு பலம் சேர்த்தது.

படிப்பு தாகம்:

என்னதான் வேலையில் படிப்படியாய் உயர்ந்தாலும் கூட ,முன்பு கிடைத்தவாய்ப்பை பயன்படுத்தி என்ஜினீயர் ஆக முடியவில்லையே என்கிற வருத்தமும்உறுத்தலும் ராமதாஸிற்கு இருந்து கொண்டேயிருந்தது. அவரது அந்த கனவுதிருமணத்திற்குப் பிறகு மனைவி சுபத்ராவின் தூண்டுதலிலும், ஒத்துழைப்பிலும் பார்ட்டைமாகவே B.E (எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்) padiththu நிறைவேறிற்று .அதுமட்டுமின்றி Operation Management ல் MBA வும் முடித்திருக்கிறார்.
1991ல் TCIL மூலம் டெபுடேஷனில் குவைத் வந்த ராமதாஸ், குறுகியகாலத்தில் சூழ்நிலையையும், மார்க்கெட்டையம் படித்து, KNETCO எனும்டெலி கம்யூனிகேஷன் நிறுவனத்தில் என்ஜினியராக சேர்ந்தார். அங்குகம்பெணியோடு ராமதாசும் வேகமாய் வளர முடிந்தது. சேர்ந்த ஆறே மாதத்தில் டெபுட்டி புராஜெக்ட் மேனேஜர், பிறகு புராஜெக்ட் மேனேஜர் எனஉயர்ந்து அது 1200 தொழிலாளர்களாக வளர காரணமாயிருந்தார்.
இந்தியர்களுக்கு அவரவர்களின் படிப்பு, தகுதியை வைத்து வேலைவாய்ப்புகள்ஏற்படுத்திக் கொடுத்து, அத்தோடு நின்றுவிடாமல், அவர்களுக்குமேல்படிப்பிலும், எதிர்கால வளர்ச்சிக்கும் வழி காட்டுவது இவரது சிறப்பு. ராமதாஸ் ஜெனரல் மேனேஜர்-- அடுத்து - CEO ஆக உயர்வு பெற்றபின் அங்கிருந்து வெளியேறி இந்தியா சென்றார்.
ஒரு வருடத்திற்கு பின் ஓமன்! அங்கு AL JASSAR கம்பெனியில்டெலிகம்யூனிகேஷன் ஆரம்பித்து அதையம் வெற்றிகரமாய் develop செய்தார். அங்கு டெலிகாம் மட்டுமின்றி அக்கம்பெனி குரூப்புக்கே CEO வாக ஆக்கப்பட்டது அவரது திறமைக்கு கிடைத்த பரிசு.! அக்கம்பெனிகுவைத்தில் கால் பதித்தபோது ராம்தாஸ் தலைமையேற்று அதையும் வெற்றிபெற வைத்தார்.
அதன்பின் 2010 ல் சொந்தமாய் இந்த GTC கம்பெனியை ஆரம்பித்து , டெலிகாம் நெட்வொர்க் வேலைகளை பிரமாதமாய் செய்து வருகிறார் .,இக்குழுமத்தில் -நெட் டெலிகாம்--zena டெக்நாலஜி, BILLkuwait , கம்பெனிகளும் இந்திய உணவகங்களும் உள்ளன. அத்துடன் குழந்தைகளுக்கு ஜப்பானின் பிரபல ஹெகுரு( HEGURU-Right BRAIN ) கல்வி கூடத்தை குவைத்தில் முதன் முறையாக நிறுவினார்.
அந்த HEGURU விற்கு இந்தியாவில் உரிமை பெற்று அது இப்போதுசென்னையில் மிக சிறப்பாக இயங்கி வருகிறது.ஆர்ப்பாட்டமில்லா அமைதி-ராமதாஸின் சிறப்பு. இனிமையான பேச்சு! சுமூகமாய் பழகும் பண்பு! எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை ! ஆத்மதிருப்திக்காகஆனமீகம் !

வேலைவாய்ப்புகள்:

இல்லாதவர்களுக்கு உதவும் மனிதாபிமானத்திற்கிடையில் 'ஒருவருக்கு மீன்இலவசமாய் தருவதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்து அதற்கானவசதிகளை செய்து தருவதால், அவர்களுக்கு நிரந்தர வாழ்வு கிடைக்கும்!' என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை!
அந்த கொள்கைப்படி ஆயிரக்கணக்காந இந்தியர்கள்-குறிப்பாய்தமிழர்களுககு வேலை கொடுத்து பலரையும் தூக்கி உயர்த்திக்கொண்டிருக்கிறார்.வேலை விஷயத்தில் ராம்தாஸ் கரார்! பிரச்சனைகளை ஆய்ந்து யாருக்கும் பாதிப்பில்லாமல் சமாதானம் -சாத்விகமாய்தீர்த்துவைப்பது இவரது குணம்.

பெருமையான விருது:

இவரது வணிகம் மற்றும் சமூக சேவையை பாராட்டி 2018 ல் கேரளத்தின்Piravasi Bharathi அரசாங்க அமைப்பு Karma Sreyas விருதை வழங்கிகவுரவித்தது தமிழர்களுக்கெல்லாம் பெருமையான விஷயம்.
ராமதாஸ் வணிகத்துடன் காலை கலாச்சார-ஆன்மிக நிகழ்வுகளுக்குபக்கபலமாய் இருக்கிறார்.குவைத் தமிழ் சங்கத்தில் தலைவராக சேவைசெய்திருக்கிறார் . இந்தியன் பிரண்ட்லைன்ர்சின் சேவை விருதுபெற்றிருக்கிறார்.
இவரது மனைவி Dr.சுபத்ராதேவி ஹைதராபாதில் பிறந்து வளர்ந்துஉஸ்மானியா மெடிக்கலில் ( MD- DGO) படித்து, Central Govt health schemeல் Senior Medical Officerஆக பணி செய்தவர். காதல் மணம் !குவைத்திலும் Al Salam மருத்துவ மனையில் பணிபுரிந்து, பிள்ளைகளின்படிப்பிற்காக சில வருடங்கள் இந்தியா போய் - இப்போது மறுபடியும் மருத்துவசேவையில் இறங்கி இருக்கிறார்.
கணவன் - மனைவி இருவருமே உதவும் குணம் பெற்றவர்கள். ஒத்தக் கருத்து! இவர்கள் காதல் திருமணம் என்பதால் அக்கம்பக்கத்தில் காதல் கல்யாணதம்பதிகலை கண்டால் தோள் கொடுக்கிறார்கள் .
'கடவுள் அருளாலும், கடுமையான உழைப்பு - முயற்சியாலும் வாழ்வில்எல்லாம் பெற்றுவிட்டோம். எங்கள் செல்வம் செல்வாக்கு படிப்பறிவு மூலம்பிறருக்கும் உதவி செய்து இப்பிறப்பின் பலனை சிறப்பிக்க வேண்டும்' என்பதை இத்தம்பதிகள் லட்சியமாய் கொண்டுள்ளனர் .
மூத்தமகள் ஜெயஸ்ரீ BTech (BioTech) மற்றும் MBA முடித்து ஜப்பானின்HEGURU வை சென்னையில நிர்வதித்து வருகிறார்.மகன் கார்த்திக் - ஐஐடி -ROORKEE யில் BTech - அடுத்து சிங்கப்பூர் National University யில் MS (Chemical Eng .) முடித்து குவைத்தில் GTCயை நிர்வகித்துவருகிறார்.
ராமதாஸின் பலம் - அன்பான அணுகுமுறை! அதட்டி உருட்டியும், சட்டம்போட்டும் பெற முடியாத வேலையை அன்பால் பெற்றுவிடலாம் என்பது இவர்அனுபவபூர்வமாய் கண்ட உண்மை.
'தொழிலாளர்களுடன் ஐக்யமாய் பழகி, அவர்களது கஷ்ட - நஷ்டங்கள், தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டி சலுகைகள் செய்து தருவதால் - அவர்களும் - அதே அளவு விசுவாசத்துடனும் ஆர்வத்துடனும் கம்பெனிக்குவேண்டி சந்தோசமாய் உழைக்கிறார்கள். எனக்கு முழு ஒத்துழைப்பும்தருகிறார்கள்' என்று ராம்தாஸ் பெருமைபடுகிறார்.
இவர் எந்த விஷயத்திற்காகவும் பயப்படுவதில்லை அலட்டிக்கொள்வதில்லை. பிரச்சனைகளை சவாலாக எடுத்துக் கொண்டு அவற்றை முறியடிக்கிறார்.
வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் படிப்பு நிச்சயம் அவசியமாய் இருக்கிறது. ஆனால் வெறும் படிப்பு மட்டுமே நம்மை உயர வைத்து விட முடியாது.எந்த ஒருவிஷயத்திலும் தெளிவான - திடமான மனநிலை வேண்டும். குழப்பமில்லாமல்முடிவெடுக்கும் உறுதிவேண்டும். இடம் பொருள் காலம் அறிந்து நமதுதிட்டத்தை முறையாக சமர்ப்பித்தாலே அதன் முக்கியத்துவம் அறியப்படும்.
ஐயோ.... இது செய்யலாம்.. செய்யக்கூடாது.. செய்தால் என்ன பாதிப்புவருமோ.. என்கிற தயக்கம் கூடாது. எந்த விஷயத்தையும் முழுசாய்ஆராயணும். சரியாக வரும் என்றால் துணிவுடன் களத்தில் இறங்க வேண்டும். நம்மால் ஜெயிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை வெற்றிக்கு மிக முக்கியம்என்பத்திற்கு ராமதாஸும் ஒரு எடுத்துக்காட்டு .

- NCM with Hari

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us