சிங்கப்பூரில் சர்வ ரோஹ சாந்தி மஹா யாகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் சர்வ ரோஹ சாந்தி மஹா யாகம்

ஏப்ரல் 10,2020 

Comments

 

தென்கிழக்கு ஆசியாவின் திருப்பதி எனப் பக்தர்கள் போற்றி வழிபடும் சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் கடந்த நான்கு நாட்களாக உலக சேமத்திற்காகவும் உயிர்க்குலமனைத்தும் பிணியின்றி நலமுடன் வாழவும் சர்வ ரோஹ சாந்தி மஹா யாகம் ஏப்ரல் ஏழாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்று நிறைவு கண்டது. தலைமை அர்ச்சகர் டாக்டர் எஸ்.கே.வாசுதேவ பட்டாச்சார்யார் தலைமையில் வைகானஸ ஆகம வேத விற்பன்னர்களால் பஞ்ச சூக்த யாகம் – தன்வந்திரி மஹா யாகம் – மூல மந்திர யாகம் எனப் பல கால யாக சாலை பூஜைகளும் ஹோமங்களும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

உபந்யாச விற்பன்னர்கள்வழி வந்த தலைமை அர்ச்சகர் ஒவ்வொரு நாளும் யாகத்தின் மகிமைகளையும் விளைவுகளையும் தமக்கே உரிய பாணியில் விளக்கியமை அருமையிலும் அருமை. ஆலயத்திற்கு நேரில் வந்து தரிசிக்க இயலவில்லையே என்ற குறை நீங்க எல்லா நாட்களும் சமூக ஊடகங்களில் மிகத் தெளிவாகத் திரையிடப்பட்டதை பக்தர்கள் பலரும் பாராட்டினர். புனித யாக சாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் தலைமை அர்ச்சகர் வழி நடத்த ஆலயம் வலம் வந்து கலசாபிஷேகம் நடைபெற்றதைக் காணக் கண் கோடி வேண்டும்.

அவரவர் இல்லங்களிலிருந்தே இவ்வற்புதத் திருக் காட்சியை தரிசித்த பாங்கு மெய்சிலிர்க்க வைத்தது. அறம் வளர்ந்திடவும் மறம் மறைந்து – தீதெலாம் நலிந்து – நன்மைகளே நடைபெறக் கூட்டுப் பிரார்த்தனை செய்யத் தலைமை அர்ச்சகர் வேண்டுகோள் விடுத்தார். ஏராளமான பக்தப் பெருமக்கள் இல்லங்களிலிருந்து ஸ்ரீ பூமி தேவி – ஸ்ரீ தேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் அருள்பெற்றுய்தனர்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us