சித்த மருத்துவர் சிவராமனுடன் காணொளி மூலம் உரையாடல்: அயர்லாந்து ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சித்த மருத்துவர் சிவராமனுடன் காணொளி மூலம் உரையாடல்: அயர்லாந்து ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாடு

மே 04,2020 

Comments (1)

 அனைவருக்கும் வணக்கம்.03 ஏப்ரல் மாலை 4 மணியளவில் (இந்திய நேரப்படி) சித்த மருத்துவர் டாக்டர்.சிவராமன் அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு மரபு வழி உணவு மூலமாக அதிகப்படுத்துவது பற்றிய உரையாடல் நேரடி காணொளி மூலமாக (Immunity Booster Webinar) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அயர்லாந்து ரஜினி மக்கள் மன்றம் ஏற்பாடு  செய்திருந்தது.


உரையாடலில் சில முக்கிய தகவல்கள் கீழ் வருமாறு...மன தைரியத்துடன், விழிப்புணர்வும் வேண்டும். பயம் தேவையற்றது. கை கழுவதல், தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் சமுக விலகல் அவசியம். சிறந்த பானங்கள்: இஞ்சி எலுமிச்சை சாறு கலந்த மிதமான சூட்டுடன் தண்ணீர் பருகலாம், சுக்குமல்லி காபி, காபியில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி, பனை வெல்லம், நாட்டு சர்க்கரை. இதனுடன் நட்சத்திர சோம்பு ஒரு துண்டு கலந்து பருகலாம். அரசாங்க 

அனுமதி பெற்ற கபசுரநீர் வாங்கி பருகலாம்.

உணவில் பயறு வகைகள், காய்கறிகள். பழங்கள், சிகப்பு அரிசி,பிரவுன் அரிசி. ரசம் தினமும் பருகுவது நல்லது. இறைச்சி வகையில் மீன், முட்டை, கோழி கறி, இதனுடன் மஞ்சள் மிளகுத்தூள் சேர்த்து வீட்டில் சமைத்து உண்பது நல்லது.
ஊரடங்கு காலங்களில் இருவேளை (கலை 9 மணிக்கு மற்றும் மாலை 4 அல்லது 5 மணிக்கு) உணவு (Intermediate Fasting) மட்டும் (உடலுக்கு ஏற்றவாறு) எடுத்துக்கொள்வது உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவும். தேவைப்பட்டால் (பசித்தால்) இரவில் சிறிது பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

விட்டமின் சி நிறைந்த பழங்கள் அதாவது நெல்லிக்காய், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

விட்டமின் டி - காலை சூரிய ஒளியில் இருந்து கிடைக்கப் பெறலாம் மற்றும்தயிர், மோர் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தேநீர் செய்முறை - நீரை கொதிக்க வைத்து அந்த நீரை எடுத்து தேநீர் பொடி உள்ள பாத்திரத்தில் ஊற்றி 3 நிமிடங்கள் மூடி வைத்து பிறகு வடிகட்டி தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.
இந்த நோய் பரவும் காலங்களில் மிளகு, மஞ்சள், சீரகம் நம் அன்றாட உணவில் கட்டாயமாக இருக்க வேண்டும்.மணமூட்டும் மசாலா பொருட்கள் உணவில் சேர்த்து கொள்வது நல்லது (பட்டை,சோம்பு ,கிராம்பு, நட்சத்திர சோம்பு. கொத்த மல்லி , புதினா, கருஞ்சீரகம்)

வாழ்க வளமுடன் நலமுடன்.

- நமது செய்தியாளர் ரமேஷ் குருநாதன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
David DS - kayathar,India
07-மே-202017:56:47 IST Report Abuse
David DS அயர்லாந்துக்கு போயும் ரஜினி பின்னாடி அலையுறீங்களா
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us