அமெரிக்காவில் மனிதநேயத் தமிழன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்காவில் மனிதநேயத் தமிழன்

மே 16,2020 

Comments (2)

அமெரிக்காவில் கொரோனா தடுப்புப்பணியில் களத்தில் முன்னணியில் உள்ள காலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மனிதநேயமிக்க தமிழர் ஒருவர் இலவசமாக உணவு தயாரித்து வழங்கி வருவது வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா அமெரிக்காவை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றைய கணக்குப்படி அந்த வல்லரசு நாட்டில் கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர், 87 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தமிழர்களின் மனிதாபிமானம் அங்கு மிளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தடுப்புப் பணியில் முன்னணியில் உள்ள காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு நாள்தோறும் தரமான உணவு களை தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறது தமிழர்கள் நடத்தும் உணவகம் ஒன்று. அதில், முக்கிய பங்காற்றுபவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சபாபதி ராஜரத்தினம் என்ற தமிழர் என்பது தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை. 

சியாட்டிலில் உள்ள அந்த உணவகத்திலிருந்து நாள்தோறும் தரமான உணவுகளை தயாரித்து கொரோனா தடுப்பு பணியில் முன்னணியில் உள்ள காவலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் இவர். நாகப்பட்டினத்தை சேர்ந்த சபாபதி, தனியார் நிறுவனம் ஒன்றில் தொலைத் தொடர்பு பொறியாளராக வேலை செய்கிறார். சுனாமி, கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களில் இவர் தமிழக மக்களுக்காக ஏராளமாக உதவியுள்ளார். இது போன்ற பெருந்துயரான நேரங்களில் சக மனிதர்களுக்கு உதவுவதுதானே மனிதப் பண்பு என்கிறார் சபாபதி. இவரது இந்த சேவைக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகர மக்களிடேயே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


- தினமலர் வாசகர் பாஸ்கர்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Sheela Ramanan - San Antonio,Texas,United States
18-மே-202003:53:17 IST Report Abuse
Sheela Ramanan Great sir-ஷீலா ரமணன்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
sathiya narayanan - Dallas,United States
17-மே-202001:00:42 IST Report Abuse
sathiya narayanan இங்கு உள்ள ஹிந்து கோவில் சார்பில் தினமும் உணவு வழங்க போடுகிறது. குறிப்பாக மருத்துவமனை மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us