ஜெர்மனியில் ஶ்ரீபிரியா ரசிகர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியில் ஶ்ரீபிரியா ரசிகர்

மே 17,2020 

Comments

பிராங்பேர்ட்ல் நான் முன்பு குடியிருந்த வீட்டில் பக்கத்து வீட்டுக்காரர் தொல்லை மிக அதிகம். கதவை கொஞ்சம் வேகமாக சாத்தினாலே ஓடி வந்து, அந்த சத்தம் தனக்கு தொந்தரவாக இருப்பதாக சொல்வார். கிச்சன் ஸ்மோக் சிம்னி ஆன் செய்தால், சமையல் மணம் எரிச்சல் ஊட்டுவதாகவும் அவர் துணிகளுக்குள் இந்த மணம் சென்று விடுவதாகவும் சொல்வார். அதனால் ஜன்னலை திறந்து விட்டு தான் சமைப்பேன்.

ஒருநாள் 'யூ டியூப்'பில் பாடல் ஓடவிட்டு துணி அயன் செய்துகொண்டு இருந்தேன். கதவு தட்டும் சத்தம்!. 'வில்லன் தான்' என நினைத்து கம்ப்யூட்டர் சத்தத்தை உடனே குறைத்தேன். மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்தேன். சிரித்துக்கொண்டு நின்றார். அவர் சிரிப்பதை அப்போது தான் பார்க்கிறேன்.'என்ன?' என்றேன் விரக்தியாக.'ம்யூசிக் நல்லா இருக்கு. இந்தியன் ம்யூசிக்?' 'எஸ்''மீண்டும் ஒரு முறை கேட்கலாமா? எனக்கு அதை காப்பி பண்ணித் தர முடியுமா?' என்றார். உள்ளே அழைத்தேன். 'யூ டியூப்'பில் பாடலை மீண்டும் பிளே செய்தேன்.ரசித்துப் பார்த்தார். 

ஒரு கட்டத்தில் கதாநாயகி ஆலமரத்தின் விழுது வழியாக தலைகீழாக இறங்குவதை மிகவும் ரசித்தார். அந்த ஒரு காட்சியை மட்டும் திரும்பவும் போடச் சொல்லிப் பார்த்தார். 'இது எப்படி தலை கீழாக.................!' என்று என்னிடம் மீண்டும் மீண்டும் ஆச்சரியமாய் கேட்டார்.'நல்லா ஆடுறாங்க, இவங்க ஜெர்மனி வருவார்களா? வந்தா என்னிடம் மறக்காம சொல்லுங்க' என்றவர் அந்த url ஐ வாங்கிச் சென்றார்.

என்ன பாடல் என்கிறீர்களா? 'நீயா' படத்தில் ஸ்ரீபிரியா தனிமையில் பாடும் 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல் தான் அது.அதன் பின் அவர் தொல்லை இல்லை. ஆனால் 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல் மட்டும் அடிக்கடி அவர் வீட்டிலிருந்து என்னை தாலாட்டியது. பின் நான் வீடு மாறினேன்.சமீபத்தில் பிராங்பேர்ட்ல் உள்ள தமிழ் கடைக்கு போகும் வழியில் அவரை சந்தித்தேன். கொஞ்ச நேர அளவலாவலுக்குப் பின்,'அந்த நடிகை ஜெர்மனி வந்தார்களா? வந்தா மறக்காம என்னிடம் சொல்லுங்க' என்றான்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மொழி தெரியாத ஒரு வெளிநாட்டுக்காரரை நம் இசையும் நடனமும் எப்படி கட்டிப் போட்டிருக்கிறதென்று வியந்தேன். 'எனக்கொரு சந்தேகம்?' என்றார்.'என்ன?''உடல் முழுக்க நிறைய நகைகளை போட்டுக் கொண்டு எப்படி அவரால் இவ்வளவு நளினமாக நடனமாட முடிகிறது?'ஸ்ரீபிரியாவுக்காக ரசிகர் ஒருவர் ஜெர்மனியில் காத்துக்கொண்டிருக்கிறார் ஒரு கேள்வியுடன்.பின் குறிப்பு: அந்த பாடலை நான் அவருக்கு கொடுத்த பின், எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. அதனால் பிரத்தியேகமாக ஸ்ரீபிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us