டோக்கியோ தமிழ்ச்சங்க மூன்றாவது இசை சமர்ப்பணம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டோக்கியோ தமிழ்ச்சங்க மூன்றாவது இசை சமர்ப்பணம்

மே 19,2020 

Comments

 உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கி கிடக்கும் இவ்வேளையில் ,டோக்கியோ தமிழ்ச்சங்கம் கடந்த 16ஆம் தேதி தனது மூன்றாவது இசை சமர்ப்பணம் நிகழ்ச்சியை இந்திய தூதரகத்தின் ஆதரவுடன், அமீரக நண்பர்களுடன் இணைந்து வெற்றிகரமாக அரங்கேற்றியது . மருத்துவர்கள் , செவிலியர்கள்,காவலர்கள் , துப்புறவு தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஜப்பானின் இந்திய தூதரக தலைவர் திரு . சஞ்சய் குமார் வர்மா தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சியினை கண்டு மனம் நெகிழ உரையாற்றினார்.


இதில் பிரபல வீணை வித்துவான் ராஜேஷ் வைத்யா, நடிகர் நாசர், மதன் பாப் , மாது பாலாஜி , பாஸ்க்கி , பாடகர் ஸ்ரீராம் , ஸ்ரீலேகா பார்த்தசாரதி , ஜனனி மதன், மருத்துவர் எஸ் ஜே ராஜ்குமார் , ஜோதிடர் ஷெல்வி , இயக்குனர் கே வி ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பு நிகழ்ச்சிகளையும் இனிதே வழங்கினார்கள் .தோக்கியோ மற்றும் அமீரகம் வாழ் தமிழர்களும் தங்கள் இசை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக அமைந்த மூன்று நிகழ்வுகளில் , முதலாவதாக அமீரக நண்பர்கள் மருத்துவர்களுக்கு சமர்ப்பணமாக 'மகத்துவர் ' என்ற பெயரில் அவர்கள் எழுதி இசையமைத்த பாடலை வெளியிட்டனர். அடுத்து டோக்கியோ வாழ் தமிழர் திரு அசோக் தான் இயற்றிய எண்ணக்களஞ்சியம் என்ற நூலை வெளியிட்டு மகிழ்ந்தார். டோக்கியோ தமிழ்ச்சங்கத்தின் செயலாளரின் 4 வயது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இணையம்வாயிலாக பலர் வாழ்த்துக்கூற அமோகமாக நடந்தேறியது.

நிகழ்ச்சிகளை ஹரி நாராயணன் , கௌரிஷங்கர் மற்றும் கணேசன் ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கினர் .
இந்நிகழ்ச்சி டோக்கியோ தமிழ்ச்சங்கத்தின் முகநூல் பக்கத்திலும் , இந்நிகழ்ச்சியின் ஊடக கூட்டாளர் சாணக்யா ஊடகத்தின் முகநூல் மற்றும் யு டியூபில் நேரலையில் ஒளிபரப்பானதுAdvertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us