6+ 6 இது உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் சீனாவின் புதிய கணக்கு ! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

6+ 6 இது உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் சீனாவின் புதிய கணக்கு !

மே 20,2020 

Comments

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13வது தேசிய கமிட்டியின் கூட்டத்தொடர் மே 21 ஆம் நாள் தொடங்க உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறும் இக்கூட்டத்தொடர், இந்த ஆண்டு 2 மாதங்கள் காலதாமதமாக தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உலக அளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த பிரச்சினையை முன்னதாக சந்தித்து மிக துரிதமாக செயல்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ள சீனா, தற்போது, சீனவின் அரசியல் அமைப்பு முறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரு கூட்டத்தொடர்களை நடத்த உள்ளது. 

இன்றைய உலக சுகாதார பேரிடர் காலத்தில் சீனாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடைபெறும் இக்கூட்டதொடர் மிகுந்த முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டு, குறிப்பிட்ட வசதிபடைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பது, தீவிர வறுமை ஒழிப்பு, மற்றும் 13வது 5 ஆண்டு திட்டத்தின் நிறைவு ஆண்டாகும். தற்போதைய சூழலில் சீனா பெரும் தொற்று நோயில் இருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாலும் சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலைமை இன்னும் சிக்கலானதாக இருப்பதால் கடுமையான விதிகளையும் சவால்களையும் எல்லா கோணங்களிலும் மிகக் கவனமாக விழிப்புடன் இருந்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகளை எப்படி அடைய வேண்டும், வெளிநாட்டு இறக்குமதி, மற்றும் உள்நாட்டு வர்த்தக பாதிப்பை எப்படி மீட்பது, பொது சுகாதாரத்தை எப்படி பேணுவது, ஏழைகளுக்கான உணவுக்கு எப்படி உத்தரவாதம் அளிப்பது போன்றவற்றில் சீனா கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் நிலையான வேலைவாய்பு, நிதி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம், நிலையான அந்நிய முதலீடு, நிலையான நிதி மற்றும் நிலையான எதிர்பார்ப்பு, ஆகிய 6 நிலையான கொள்கைகளுக்கும் மற்றும் குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு அடிப்படை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பணிகள், சந்தை பங்களிப்புக்கான உத்தரவாதம், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு, தொழிற் சங்கிலிக்கான உத்தரவாதம், அடித்தளத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என 6 உத்தரவாதமான கொள்கைகளுக்கும் சீனா முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ளது. 

பிரச்சினைகளை எப்படி கையாள்வது, எப்படி சரி செய்வது, மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவை குறித்து இந்த இருஅமர்வுகளிலும் விவாதிக்கப்பட்டு, சீன பாணியிலான ஜனநாயகத்தின் சக்தி நிரூபிக்கப்பட உள்ளது. சீனக் கப்பலை எந்த அலையும் வீழ்த்த முடியாத அளவிற்கு மக்களின் ஞானமும் ஒற்றுமையும் முடிவில்லாத ஆற்றலைவழங்கும் என்பது காலம் உலகுக்கு காட்டும் உண்மை.Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us