தமிழகத்தில் -குவைத் இந்தியன் பிரண்ட்லைனெர்ஸின் கொரோனா நிவாரண பணிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழகத்தில் -குவைத் இந்தியன் பிரண்ட்லைனெர்ஸின் கொரோனா நிவாரண பணிகள்

மே 21,2020 

Comments

இந்த கொரானா , உலக பொருளாதாரத்தை மட்டுமல்ல சேவையாளர்களைகூட முடக்கி வைத்திருப்பது உண்மை. இதற்கு முன்பு --வெள்ளம், புயல் என ஏற்படும் அழிவுகளுக்கு நேரில் போய் உதவி செய்து (அல்லது செய்வது போன்று ) சோஷியல் மீடியாக்களில் நிறையவே செய்திகள் உலா வரும். இப்போது தொற்று மிரட்டுவதால் அந்த மாதிரி ஆர்ப்பாட்டங்களை அதிகம் காணமுடியவில்லை.

சேவையை வைத்து அரசியல் பண்ணுபவர்கள் ஒருபுறமிருக்க - வைரஸ் தாக்கத்தையும் தாண்டி தொண்டுகளை தொடரும் தனி மனிதர்களும், அமைப்புகளும் இருக்கவே செய்கின்றனர் .கஜா புயல் சமயத்தில், குவைத் இந்தியன் பிரண்ட்லைனர்ஸ் அமைப்பு, தமிழகத்தில் பல தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்த நேரம் பாதித்த இடங்களுக்கு பொருட்களை விநியோகித்திருந்தது. அதில் ஒன்று சென்னை வேல்டு உமன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்!. அது இப்போதும் கொரோனா பாதிப்பு நிவாரணத்திற்கு நிதி வேண்டி அணுகவே , கொடுத்ததும் சென்னை -விழுப்புரம்- திண்டிவனம்-பாண்டி என பயனாளிகளை கண்டறிந்து உதவி வருகிறது.

அத்துடன் முக கவசம் தட்டுப்பாடு இருக்கவே - சமயோசிதமாக யோசித்து , பொங்கலுக்காக அரசாங்கம் கொடுத்த சேலைகளை சேகரித்து, பெண் தையல் கலைஞர்களை வைத்து வண்ண கவசங்கள் தயாரித்து இலவசமாய் விநியோகித்து வருகிறார்கள் .
இந்த அமைப்பின் முக்கிய நபரான திருமதி சத்யா -பெரிய அளவு படிப்போ, வசதியோ இல்லாவிட்டாலும் கூட குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் ஆத்மார்த்தமாய் செயலாற்றி வருபவர். இவர் .சுனாமி, கஜாப்புயல், கேரளா வெள்ளம், சென்னை வெள்ளம், வாரா புயல், ஒடிசா புயல் என அனைத்திற்கும் தன் படையோடு சென்று உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி கொண்டிருப்பவர்.

இந்த அமைப்பு ,160 மாணவர்களின் படிப்பை ஏற்றுள்ளதுடன் ,சுமார் 5000 ஏழை மாணவர்களுக்கு அத்யாவசிய பொருட்க்களும் விநியோகித்து வருகிறது. . பெப்ரவரி 2019 ல் மாணவிகளுக்கு சமையல்-ரங்கோலி-நடனம்--பேச்சு போட்டிகள் நடத்தி கவர்னர் மூலம் Young queen விருதுகள் வழங்கினர். டெல்லியில் 25-11-2018 ல் மாசுக்கட்டுப்பாட்டிற்காக சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். சேவையில் இப்படி இவர்களுக்கு பல முகங்கள்!மனமிருந்தால் மார்க்கமுண்டு!

-- NCM with HariAdvertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us