இணையம் வழிச நுழைவோம்... இதயம் வரை மகிழ்வோம்... | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இணையம் வழிச நுழைவோம்... இதயம் வரை மகிழ்வோம்...

மே 23,2020 

Comments

கொரோனோ பேரிடர் ஊரடங்கு காலத்திலும் கடல் கடந்து வாழுகின்ற தமிழ் மக்களின் நிலை குறித்து அறியவும், தமிழ் மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளவும் இராமநாதபுரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் K.Navas Kani அவர்கள் zoom செயலி மூலம் இணையம் வழியாக சவுதி அரேபிய வாழ் இராமநாதபுரம் தொகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்த இணையம்_வழி_நுழைவோம்... இதயம்_வரை_மகிழ்வோம்..நிகழ்ச்சி புதன்கிழமை(21-05-2020) மாலை 4:30 முதல் 7:00 மணி வரை நடந்தது.

நிகழ்ச்சியை இராமநாதபுரம் தொகுதி மக்களின் சார்பில் ரஹ்மத்துல்லா அனைவரையும் ஒருங்கிணைக்க ஜெத்தாவில் இருந்து நூருல் அமீன், தமாமில் இருந்து சீனிமுகம்மது மற்றும் முகம்மது யாசர் ஆகியோர் ஒத்துழைக்க ஜெத்தா முத்தமிழ்ச் சங்க பொருளாளர் ரஃபிக் ஹூஷேன் அவர்கள் இணை ஒருங்கிணைப்பாளராக ஒருங்கிணைத்திருந்தனர்.

நிகழ்ச்சியை ஜெத்தாவில் இருந்து நூருல் அமீன் அவர்கள் அனைவரையும் வரவேற்க அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கா.நவாஸ்கனி அவர்கள் உரை நிகழ்த்தினார். 


தன்னுரையில் கொரோனோ பேரிடர் குறித்த விபரங்களையும், இன்றைய நிலையில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள், வெளி நாடு வாழ் மக்களின் வருகை அவர்களை குவாரண்டைன் செய்யும் விதம் மருத்துவ பரிசோதனை, விமான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து நிலைகளை பற்றியும் பேசினார். இராமநாதபுரம் தொகுதியின் மக்கள் ரியாத், ஜெத்தா, தமாம் பகுதிகளில் இருந்து தங்கள் கோரிக்கைகளை, சந்தேகங்களை கேட்க பாராளுமன்ற உறுப்பினர் அனைத்திற்கும் பதில் கொடுத்தார். மேலும் அதிகமான மக்கள் தமிழகத்திற்கு விமான சேவை இல்லை என்பதும், டில்லி மற்றும் கேரளாவிற்கு விமான போக்குவரத்து இருக்கின்றது என்றும் வயதான தமிழ் மக்கள், கர்ப்பினிகள் மற்றும் நீரிழிவு நோயுள்ளோர் எப்படி தமிழகம் திரும்புவார்கள் என்றும், தொடர்ந்து தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருவது குறித்த கவலையை வெளிப்படுத்தினர்.பாராளுமன்ற உறுப்பினரும் கவலையை பகிர்ந்து கொண்டு விரைவில் அரசு மற்றும் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பதில் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெத்தா மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் இப்ராஹிம் அலி, ஜெத்தா தமிழ்ச் சங்க பொறுப்பாளர் சிராஜூதீன், ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத் தலைவர் ஜாஹிர் ஹூசேன், தமுமுக பொறுப்பாளர் கீழை இர்ஃபான், தமாம் தமிழ்ச் சங்க பொறுப்பாளர் வாசு, ஜெத்தா அப்துல் சமது, சேலம் இஸ்மாயில், குடந்தை ஹாஜா மைதீன், தஞ்சை ரஃபிக் தீன் உள்ளிட்டோரும் ரியாத், ஜெத்தா, தமாம், துபாய் உள்ளிட்ட வளைகுடா தமிழ் மக்களும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாயகத்தில் இருந்தும் பல தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் ஜெம்ஸ் அல் அமீன் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாடு வாழ் மக்களின் தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழக அரசுக்கு விமான போக்குவரத்து கோரிக்கைக் கடிதங்களை அனுப்புமாறும், தானும் அதனை வழி மொழிந்து விரைந்து நடவடிக்கை எடுத்துத் தருகின்றேன் என்றும் உறுதியளித்தார்.

- தினமலர் வாசகர் முகம்மது ரஹ்மத்துல்லா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us