சீனாவின் நகரங்களில் 90 இலட்சம் வேலைவாய்ப்புகள்: நாடுமுழுவதும் இவ்வாண்டுக்குள் வறுமையை ஒழிக்க திட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சீனாவின் நகரங்களில் 90 இலட்சம் வேலைவாய்ப்புகள்: நாடுமுழுவதும் இவ்வாண்டுக்குள் வறுமையை ஒழிக்க திட்டம்

மே 23,2020 

Comments

பெய்ஜிங்: சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடர் 22 ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் முக்கியத் தலைவர்கள் உட்பட 2897 பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 2019 ஆம் ஆண்டின் அரசுப் பணியறிக்கையை வழங்கி, 2020 ஆம் ஆண்டின் பணிக்கான முன்மொழிந்தார். இந்த முன்மொழிவில் வறுமை ஒழிப்பு முக்கிய அம்சமாக இடம்பெற்றது.முன்பு பேசிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2020ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் வறிய மக்கள் அனைவரையும் வறுமையிலிருந்து விடுவிக்க வைப்பது, கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களுக்கு அளித்த வாக்குறுதி ஆகும். அது, திட்டப்படி நனவாக்கப்படும் என்று கூறினார். மேலும் நாட்டில் வறுமையை முழுமையாக ஒழிக்கும் விதமாக, சீன அரசு, கடைசி 52 வறுமை வட்டங்களுக்கு 3080 கோடி யுவான் உதவித் தொகை வழங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வறுமையில் சிக்கியுள்ள மக்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தல், சீன வறுமை ஒழிப்பின் முக்கிய பகுதியாகும். தற்போது வறிய கிராமங்களிலிருந்து பிழைப்புக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் இருந்ததைப் போலவே 95.4 விழுக்காடு வகிக்கிறது. மேலும் அரசு, சுமார் 560 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம், தொற்றுநோய் பரவலால் பாதிக்கப்பட்ட 3 இலட்சம் வறிய மக்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில் சீராக இயங்கி வரும் சீனப் பொருளாதாரத்தால், பொது மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகவும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6.1 விழுக்காடு அதிகரித்து, 99 இலட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளதாகவும் லீ கெச்சியாங் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பேணிக்காப்பதிலும் சீன அரசு கவனம் செலுத்தும். வறுமை ஒழிப்புபணியை நிறைவேற்றி, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தை உருவாக்குவதற்கான இலக்கை நனவாக்க பாடுபடும்.

இவ்வாண்டில் சீனாவின் நகரங்களில் 90 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்பு இல்லாவிகிதம் 6 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று அரசுப் பணியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டில், ஆக்கப்பூர்வமான நிதிக்கொள்கையையும் நிதானமான நாணயக் கொள்கையையும் மேற்கொள்ளவுள்ள சீன அரசு, புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு ஒரு இலட்சம் கோடி யுவான் சிறப்புத் தேசியக் கடனையும் அளிக்கவுள்ளது.
மேலும், இவ்வாண்டு, ஆக்கத் தொழிலின் முன்னேற்றத்தையும் புதிதாக வளரும் தொழிற்துறையின் வளர்ச்சியையும் முன்னேற்றவுள்ள சீன அரசு, ஆக்கத்தொழிலின் இடைக்கால மற்றும் நீண்டகால கடன் தொகையைப் பெருமளவில் அதிகரித்து, தொழிற்துறையில் இணையத்தின் பங்களிப்பை வளர்த்து, தொழில் நுட்பம் மிக்க ஆக்கத் தொழிலாக முன்னேற்ற வேண்டும். அதோடு, மீதமுள்ள வறிய மக்கள் அனைவரையும் இவ்வாண்டுக்குள் வறுமையிலிருந்து விடுவிக்க சீனா உத்தரவாதம் அளித்துள்ளது..

உலக வங்கியின் விவரங்களின்படி, உலக அளவிலான வறுமை குறைப்புக்கு சீனாவின் வறுமை குறைப்புப் பணி, 70 விழுக்காட்டுக்கு மேல் பங்கு ஆற்றி வருகிறது. இது குறித்து, பிரிட்டனின் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சீன ஆய்வகத் தலைவர் கேரி ப்ரான் கூறுகையில், சீனாவின் வறுமை ஒழிப்பு இலக்கு விரைவில் நனவாக்கப்படும். சீனா, உலகத்துடன் இணைந்து, தொடரவல்ல, நியாயமான, பரஸ்பர நலன் மற்றும் சமூகத்தின் கூட்டு வெற்றியை உருவாக்கும் என்று தெரிவித்தார். 


- சீன ஊடகக் குழுமம்Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us