கூலித் தொழிலாளிக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மருத்துவ, குடும்ப நல நிதி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கூலித் தொழிலாளிக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மருத்துவ, குடும்ப நல நிதி

ஜூன் 02,2020 

Comments

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் கடந்த ஒரு மாதமாக தஞ்சைப் பகுதிகளில் ரமலான் மாத நோன்புகாலத்தில் ஸஹர் எனும் அதிகாலை உணவினை தினமும் சுமார் 400 பேருக்கு *தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்க நட்புகளோடும், மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை, இயற்கை அறக்கட்டளை நிர்வாகிகளோடும் இணைந்து கிங்ஸ் கேட்டரிங்ஸ்* மூலம் தரமாக சமைத்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அனுமதியோடு பெரும்பாலும் அவரவர் இல்லங்கள் சென்றும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் வழங்கி வந்தது.

அப்போது மகர் நோன்ம்புச்சாவடி பள்ளிவாசல் நிர்வாகிகளின் மூலம் பள்ளிவாசலுக்கு அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்ற மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டி அதன் மூலம் கிடைக்கும் கூலியினால் குடும்பம் நடத்தி வந்த முகமது ரஃபி வயது 45 கடந்த சில நாட்களுக்கு முன் இடது கை மற்றும் இடது கால் வாதமடித்து சில லட்சங்கள் செலவு செய்தும் குணமாகாமல் இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுடன் சிரமப்படும் செய்தியை அறிந்து ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் லயன் ஜாஹிர் ஹூஷேன் மற்றும் பொருளாளர் ரஃபிக் ஹூஷேன் ஆகியோர் இந்தக் குடும்பத்தினருக்கு உதவ தங்கள் நிர்வாகிகள் மற்றும் ஜெத்தா வாழ் தமிழ் மக்கள் மூலம் உதவி செய்ய தீர்மாணித்து... கடல் கடந்து வாழும் தமிழுறவுகள் மூலம் நிதி திரட்டி உதவி செய்தனர்.

சவுதி அரேபியாவின் ஜூபைலில் இருக்கின்ற யுனிவர்சல் இன்ஸ்பெக்‌ஷன் நிறுவனத்தின் மேலாளர் திருச்சியைச்சேர்ந்த பதுருதீன் அப்துல் சமது அவர்களின் பெரும் ஆதரவோடும் பிற நணர்களின் நிதிகளின் மூலமும் ரூ 1,30,000த்தை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மூலம் அனுப்புவதாகவும், மேலும் வரும் ஓரு ண்டிற்கு அந்தக் குடும்பத்தினருக்கு மாதம் தலா ரூ 5,000 அனுப்புவதாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இதனைக் கொண்டு கேரள எண்ணெய் மசாஜ் மருத்துவமும், ஆங்கில மருத்துவமும் செய்ய *எம்.சாவடி பள்ளி நிர்வாகிகள் ரம்ஜூதீன், நாசர் ஆகியோருடன் மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை நிர்வாகிகள் லயன் காலித் அகமது மற்றும் லயன் ஜாஃபர்* ஆகியோர் முகமது ரஃபி இல்லத்திற்கு நேரில் சென்று கேரள வைத்தியர் வினோவிடம் மருத்துவத்திற்காக காசோலை வழங்கியும், குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்ய உறுதி ஏற்றும் பண உதவியும் செய்தனர்.

மேலும் அவரின் குழந்தைகளின் பள்ளிக் கட்டணங்களை கட்டவும் தீர்மாணித்துள்ளது. மேலும் *மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை, இயற்கை அறக்கட்டளை - மகர்நோன்புச்சாவடி பள்ளியின் நிர்வாகிகளோடும்* அடுத்த 12 மாதங்களுக்கான குடும்ப செலவை *ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்* ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளனர்.
கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் நலம் மீது அக்கறைக் கொண்டு செயல் படுகின்ற ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் செயல்களையும், சேவைகளையும் மகர் நோன்புச் சாவடி பள்ளியின் நிர்வாகிகளும், அறக்கட்டளைகளின் நிர்வாகிகளும் வெகுவாக பாராட்டினர்.

- தினமலர் வாசகர் ஜாஹிர் ஹூஷேன் (ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத் தலைவர்)

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us