'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்' ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்' ஜெத்தா முத்தமிழ்ச் சங்க நிகழ்ச்சி

ஜூன் 02,2020 

Comments

கொரோனோ ஊரடங்கு மன உளைச்சலை வெல்ல இணையம் வழியே 'மனம் திறப்போம், மனம் மகிழ்வோம்'... நிகழ்ச்சியை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்தியது.

கடந்த சில மாதங்களாக உலகையே புரட்டிப் போட்டு வரும் கொரோனோ நோய்க் கிருமி தொற்றின் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் இருக்கின்றது.

வளைகுடா நாடுகளில் பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோகின்ற நிலை, சுய தொழில் புரிவோர், கூலி வேலை செய்வோர் செய்வதறியாது திகைத்து இருக்கும் நிலை, அது போல் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 15 முதல் 40% வரை சம்பளக்குறைப்பு, சுற்றுலா விசாவில் வந்தோர் தாயகம் திரும்ப இயலா நிலை, கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் முறையான காப்பீடின்றி மருத்துவ உதவி பெற இயலா நிலை, பள்ளி கல்லூரிகள் செல்ல இயலாமல் மாணாக்கர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலை என சூழ்நிலை மனித குலத்துக்கு அச்சமும், மன உளைச்சலையும் தந்துள்ளது.

இந்த மன உளைச்சலை வெல்வது எப்படி என்றும், இதற்அகு சரியான ஆலோசனைகளை வழங்க ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் தாயகத்தில் தஞ்சையில் சிறப்பாக செயல்படுகின்ற தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து தொடர்ந்து இரண்டு நாட்கள் (மே 14 - 15ல் ) மனம் திறப்போம்... மனம் மகிழ்வோம் எனும் நிகழ்ச்சியை இணையம் வழியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை உளவியளாலர் ஸ்ரீனிவாசரெங்கன் அவர்களைக் கொண்டு சிறந்ததொரு நிகழ்ச்சியை நடத்தியது.

முதல் நாள் தாயகத்தில் உள்ள பெரும்பாண்மையான லயன்ஸ் சங்கத்தினரும், பொது மக்களும், இரண்டாம் நாள் சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் தமிழ் மக்களும் அதிகமாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உளவியளாலர் ஸ்ரீநிவாரெங்கன் அவர்கள் இப்பேரிடர் கால பிரச்சனைகள் மக்களை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்றும் அதனால் மனம் தளராமல், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்றும் ஆலோசனைகளை வழங்கியும், கேள்விகள் கேட்டவர்களின் மனம் நிறைவாகும் படி தக்க பதில்களை கொடுத்து சிறப்பு செய்தார்.

இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் லயன் ஸ்டாலின் பீட்டர் ஒருங்கிணைக்க அவருக்கு ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் லயன் ஜாஹிர் ஹூசேன் துணை புரிந்தார். மேலும் தாயகத்தில் நடந்த நிகழ்ச்சியை ஐயா உணவக நிறுவனமும், ராஞ்ஜன் மருத்துவ மையமும் செய்திருந்தது.

ஜூன் மாதமும் பெண்களுக்கென சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை பிரத்யேகமாக நடத்தவும் இருக்கின்றது.

- தினமலர் வாசக்ர் ஜாஹிர் ஹூசேன் ( ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத் தலைவர்)

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us