ரமேஷ் ராமச்சந்திரன்- உலக தொழில் நிறுவனத் தலைமை பதவியில்- வாழ்நாள் சாதனை தமிழர்! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரமேஷ் ராமச்சந்திரன்- உலக தொழில் நிறுவனத் தலைமை பதவியில்- வாழ்நாள் சாதனை தமிழர்!

ஜூன் 03,2020 

Comments

வாழ்க்கையில் படித்து, வளர்ந்து, உயர்ந்து, அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் உண்டு. அற்புதத்துடனேயே பிறந்து சாதிப்பவர்களும் உண்டு. இதில் இரண்டாம் ரகத்தை சேர்ந்தவர் EQUATE Petrochemical கம்பெனியின் CEO மற்றும் தலைவரான Dr. ரமேஷ் ராமச்சந்திரன்.
EQUATE என்பது குவைத்தில் PIC +அமெரிக்காவின் DOW கெமிக்கல் கம்பெனியுடன் இணைந்து லாபகரமாக இயங்கி வரும் தனியார் நிறுவனம். இதன் கிளைகள் ஜெர்மனி ,கனடா,அமெரிக்கா, இந்தியா என பல நாடுகளில் உண்டு. இந்த நிறுவனத்தில் வெளி நாட்டினர் அமரமுடியாத தலைமை பொறுப்பை ஏற்று,சவால்களை எதிர்கொண்டு Dr .ரமேஷ் வெற்றி கண்டிருக்கிரார்.

சவாலும்,போராடடமும் இவருக்கு புதிதல்ல. பிறப்பின் போதே ரமேஷின் போராட்டம் ஆரம்பித்துவிட்டது. ஆமாம். டெலிவரியிலேயே இவருக்கு சிக்கல்! மயிலை கோஷா ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள், தாயை தான் காப்பாற்ற முடியும் - சேயின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என கண்டிப்பாக சொல்லிவிட்டனர். சுற்றமும் நட்பும் நம்பிக்கை இழந்து மனதை தேற்றிக்கொண்டிருக்க -- தாயின் பிரார்த்தனை வீண் போகவில்லை. சிசேரியன் என்கின்ற ஒண்றையே அறியாத அந்த நாட்களில் ,பெரிய போராடடத்துக்குப் பிறகு சிசேரியன் மூலம் "Test & Run" ல் பிறந்தவர் இவர்.
கெமிக்கல் துறையின் மேல் இளமையிலேயே நாட்டம்
சென்னை வாசியான ரமேஷின் தந்தை , திரு ராமச்சந்திரன், பர்மா செல் மற்றும் NOCIL Petochemical கம்பெனிகளில் பணி புரிந்ததால் இவருக்கு கெமிக்கல் துறையின் மேல் இளமையிலேயே நாட்டம் இருந்தது .
அப்பா கல்கத்தாவில் பணி என்பதால் ரமேஷ் 3ம் வகுப்பு வரை அங்கும் , பிறகு சென்னை வேலை மாற்றத்திற்கு பிறகு பத்மா சேஷாத்ரி பள்ளியிலும் படிப்பு தொடர்ந்தது .
அங்கு கல்வியுடன் பேச்சுத்திறன் மற்றும் இசையில் இவரது திறமை வளப்பட்டிருந்தது. அதன் காரணமாய் ரமேஷின் விருப்பமும் ஆர்வமும் கலை - கலாச்சார - பொழுதுபோக்கு துறையின் மேல் திரும்பிற்று .
ஆனால் நிர்பந்தம் காரணமாய் IITயில் சேர Entrance எழுதியும் கிடைக்காமல் போகவே, இவரை விட வீட்டினருக்கு அதிக ஏமாற்றம்! மகனின் எதிர்காலம் வீனாகிவிடுமோ என்று அவர்களுக்கு பயம்! வருத்தம்! ஆனால் ரமேஷ் எதை பற்றியும் கவலைப்படாமல் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் Production Engineering ல் சேர்ந்தார்.
கற்றுக் கொண்ட பாடம்
பொழுதுபோக்கு -விளையாட்டு துறைகளில் பெரிய அளவில் வெற்றியும் கிட்டலாம். அதை விட அதிகமாய் தோல்விக்கும் வாய்ப்பிருக்கிறது. எல்லாம் அவரவர் திறமை--முயற்சி-செயல்பாடுகளை பொறுத்தது!.பெற்றோர்கள் தங்கள் கனவுகளையும் ஆசைகளையும் பிள்ளைகள் மேல் திணித்து, அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. பிள்ளைகளுக்கு எதில் ஆர்வமோ அந்த துறையில் அவர்களை பயணிக்க விட்டுவிட வேண்டும் - வழிகாட்ட வேண்டும்-- என்பது அனுபவத்தின் மூலம் இவர் கற்றுக் கொண்ட பாடம்.
1982 ல் இன்ஜினியரிங் முடித்ததும் ரமேஷிற்கு வெளிநாடு போய் வேலை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எழ, GRA Exam ஐ முழு மூச்சுடன் எழுதி, கொலம்பியா யுனிவர்சிடியில்- கெமிஸ்ட்ரி யில் Master டிகிரி + PhDக்கு ஸ்காலர்ஷிப்புடன் வாய்ப்பு கிடைத்தது. அதே சமயம் IIM மும் எழுதி, எண்ட்ரன்ஸில் ஸீட் கிடைக்க, குழப்படி ஆரம்பம்! வீட்டினர் IIM க்கு ஒட்டளிக்க , இவருக்கோ அமெரிக்காவின் மேல் பாய்ச்சல்!
பெற்றோரின் அன்பும் தியாகமும்
பெற்றோரின் சம்மதத்தை போராடி பெற்றிருந்தாலும் கூட , அப்போது வீட்டில் இருந்த பொருளாதாரத்தை வைத்து அமெரிக்கா பயணிக்க முடியாத நிலைமை! என்ன செய்வது என்கிற சூழலில் ரமேஷின் தீவிரத்தை உணர்ந்து அப்பா, LICயில் லோன் எடுத்து அனுப்பி வைத்தார். மகனின் ஆசா பாசங்களை சகித்துக்கொண்டு ,பொறுத்துக்கொண்டு சிரமங்களுக்கிடையிலும் படிக்க வைத்து ஆளாக்கின பெற்றோரின் அன்பையும் தியாகத்தையும் ரமேஷ் கண் கசிவுடன் நினைவு கூர்கிறார்.
தனது லட்சியத்துக்காக பெற்றோரை ரொம்ப கஷ்டப்பட வைக்க கூடாது என்று ரமேஷ் அன்று பாம்பே வரை ரயில்! பிறகு அங்கிருந்து கொலம்பியாவிற்கு விமானம் !
வாழ்வில் சில சமயம் நமக்கு அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விழி பிதுங்க வைக்கும். சில சமயம் பல கதவுகள் திறக்கப்பட்டு எதில் நுழைவது என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி அதிலும் சிக்கல் தருவதும் உண்டு.
அன்று அப்பாவின் சொல்படி IIMக்கு போய் கம்ப்யூட்டர் படித்திருந்தால் உடனடி வேலை--உயர்வு என வாழ்க்கையும் வெற்றியும் எளிதாக அமைந்திருக்கும்.ஆனால் இவரது முடிவு தவறானதாக அந்த சூழல் ஆக்கி விட்டிருந்தது.
வாழ்க்கைப் போராட்டத்தில் இன்னொரு கட்டம்
கொலம்பியாவில் கெமிஸ்ட்ரியில் Master மற்றும் Ivy league school ல் phd யும் முடித்தும் கூட எந்த பிரயோஜனமும் இல்லை. சரியான --தகுதியான வேலை கிடைக்கவில்லை. 1984 - 85ல் சும்மா ஒப்புக்கு வேலைப்பார்த்து மன மற்றும் பணரீதியாக மிகவும் கஷ்டபட்டார். அது அவரது. வாழ்க்கைப் போராட்டத்தில் இன்னொரு கட்டம்!
ஆனாலும்கூட மனம் தளரவில்லை. நம்பிக்கையை கைவிடவில்லை. .என்னதான் தொழில் பக்கம் கவனம் இருந்தாலும், ரமேஷின் கற்கும் தாக்கம் குறைந்ததில்லை. கிரியேடிவாக..எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பார்.
அதன் படி Rutgers யுனிவர்சிட்டி யில் பகுதி நேரமாக MBA - Finance முடித்ததால் ,அறிவியல் பக்கமிருந்து நிர்வாகம் பக்கம் கால் பதிக்க முடிந்தது.
ஒரு கம்பெனியின் வளர்ச்சி --திறமையானவர்களை அதிலும் குறிப்பாய் இளைஞர்களை தேடிப்பிடித்து அமர்த்துவதில் இருக்கிறது.
MR.CC.PAI மற்றும் REBECCA கம்பெனிகளில், இவருக்கு அப்படிப் பட்ட வாய்ப்புகள் தரப்பட்டு தன் திறமையை நிரூபித்தார். பிறகு இவருக்கு ஏற்றம் தான்!. அடுத்த வாய்ப்பு DOW கம்பெனியில் ! அப்போது Dow கம்பெனி, யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி இருக்கவே அதில் hydrocarbon projectல் இவர் திறம்பட பணி புரிந்து, பிறகு கனடா கெமிக்கல் டிவிஷனில் பிரசிடெண்ட் ! .அதைத் தொடர்ந்து President ஆக Dow India மும்பையில் மூன்று 3 வருடம்!
இந்தியாவில் பங்களிப்பு
இந்தியாவில் அந்த சமயம்-- சுத்தமான குடிநீர் வழங்கும் Health India நிறுவனத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. HABTA T அட்வைசரி கமிட்டியில் மெம்பராகவும் ரமேஷ் திறம்பட செயல்பட்டார் .
போபால் யூனியன் கார்பைடில் விபத்து நடந்திருந்த சமயம் ரமேஷ் அங்கு சேர்ந்திருந்தார். அப்போது பாலிமர் பற்றி இவர் research செய்து PhD வாங்கினார்.அதுதான் சேவிங் பிளேடின் மேல் வெண்மையாய் பொருத்தப்பட்டு(கில்லட்டின்) விற்பனை ஆயிற்று. பெண்களுக்கான ரேசரிலும் இவர் கவனம் செலுத்தி அதுவும் கமர்ஷியலாக வெற்றிப்பெற்றது.
பிறகு துபாய்க்கு ME (middle East) Globalக்கு CEO வாக சென்றார். Equate நிறுவனம் அதை வாங்கியபின் - 2017 ல் Equateன் வைஸ் பிரசிடெண்ட்டாக ரமேஷ் பொறுப்பேற்றார்.
அங்கு ஒரே வருடத்தில் CEO + president ஆக பதவி உயர்வு! இவர் சேர்ந்த பின் ,அந்த வருடம் எந்த ஒரு Private கம்பெனியும் கண்டிராத வெற்றியை Equate பெற்றது என்பது குறிப்பிடத்தக்க சாதனை!அத்துடன் நில்லாமல் - இவரது தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலில் USA.-- Texas ல் 2பில்லியன் டாலரில் Ethelene Project -- திடடமிட்ட பட்ஜட்டில்--திட்டமிடட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதுவும் வெற்றிகரமாய் செயல்பட்டு வருகிறது. USAவின் முதல் Chemical Project-ட்டான அதை ரமேஷின் வாழ்நாள் சாதனை என்று கூட சொல்லலாம்.
விருதுகளும் கௌரவமும் :

2005 ல் ,பெட்ரொ கெமிக்கல் Industry க்கு ரமேஷின் பங்களிப்புக்காக Alberta Centenary விருது பெற்றிருக்கிறார்.
2008 ல் Indian Institute of Chemical Engineers முலம்-- Dr.RA Mashelkar மெடல் மற்றும் Chemcon சிறந்த போச்சளர் விருது..என இவருக்கு பல மகுடங்கள்!
திருமதி லதா ரமேஷ், Biochemistryயில் Master முடித்தவர். Cancer researchல் இவர் ஸ்பெஷலிஸ்ட்! BAHAMASல் LICயில் Deputy chairman ஆக இருந்தபோது ரமேஷுக்கு லதா அறிமுகமாகி, இவர்களது திருமணம் சென்னையில் நடந்தது. அன்று முதல் லதா தனது சிறப்பு படிப்பு-- பதவியை தியாகம் செய்து இவருடனேயே பயணிக்கிறார்.அது ரமேஷிற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.
அவர் Genetic Scientist. இன்னும் சொல்லப் போனால் அவர்தான் உண்மையான விஞ்ஞானி! ஆனால் குடும்பம்- பிள்ளைகள் என பொறுப்பு ஏற்று அவர்களை மோல்ட் பண்ணுவதெல்லாம் திருமதி லதாதான்.
இவர்களது மகன் வினய் கொலம்பியாவில் கம்ப்யூட்டரில் Master முடித்து - Bloomberg ல் வேலை பார்க்கிறார்.இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை தான் வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. ஆனால் அதற்கு யாரும் எந்தவித கேரண்டியும் தர முடியாது என்பதால் - 2002 இல் சென்னையில் மேக்னா என்னும் பெண் குழந்தையை தத்தெடுத்து - வளர்த்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவரும் மேக்னா - முழுக்க முழுக்க - அப்பா பெண்! மகள் தன் சுபாவப்படி இயங்குபவர் என்பதில் இவருக்கு பூரிப்பு!
ரமேஷின் பலம் Teamwork !அதிலும் சரியான நபரை சரியான வெலைக்கு தேர்ந்தெடுத்து அமர்த்துவதில் கைதேர்ந்தவர். அதிலேயே இவரது வெற்றியும் அடங்கியிருக்கிறது.ரமேஷ் மிக எளிமையானவர். பழக சாது!ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அசுரர் !
ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டால் அதில் 100 என்றில்லை 150% உழைக்கணும்-- வெற்றித் தேடி தரணும் என்பது இவரது வேட்க்கை !அதற்கு ஏற்றப்படி தகுதியான ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்து மானிட்டர் பண்ணிக் கொண்டிருப்பார். செயல்பாடுகள்
ஆறுமாதம் வரை எதிர்பார்த்தபடி போகலை என்றால் -- எங்கு யாரிடம் குறை என ஆராய்ந்து - அங்கு வேறு நபரை நியமித்து விடுவார். முடிவெடுப்பதில் பாராபட்சம் பார்ப்பதில்லை.
இவரது அடுத்த பலம் - பேச்சுத்திறமை. ஒரு விஷயத்தை எளிமையாய் - புரியும்படி - சுவையாய் பகிரும் நேர்த்தி!. பள்ளிப் பருவம் முதலே அது இவர் வளர்த்துக் கொண்ட வளமை!
ரமேஷ் படிக்கும் போது, பள்ளியில் மட்டுமின்றி கல்லூரியிலும் Extra Curricular ஆக்டிவிடியில் கவனம் செலுத்தி, Entertainer ஆக தன் திறமையை நிரூபித்திருந்தார்.அதன் காரணமாய் கெமிஸ்ட்ரியை விட அவருக்கு அத்துறையின் மீது நோட்டம் இருந்தது.
தூர்தர்ஷன் அப்போது ஆரம்பித்திருந்த சமயம். அதில் Game Show எதுவும் இல்லாதிருக்க, 'Just a Minute' எனும் நிகழ்ச்சியை இவர் துவக்கி நடத்தினார்.நிறுத்தாமல் ஒரு நிமிடம்-- ஏதாவது தலைப்பில் பேசும் போட்டி அது!. அதை வெற்றிகரமாய் நடத்தின - presentation Skill தனது நிர்வாகத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ரமேஷ் பெருமை படுகிறார்.
சிறுவயது முதலே இசை மற்றும் நாடகத்தில் இவருக்கு ஆர்வம் உண்டு. மிருதங்கம் சிறப்பாக வாசிப்பார்.ஆனால் தற்போது நேரமில்லாததால் சீசனுக்கு சீசன் கச்சேரிக்கும், நாடகங்களுக்கும் - ஊருக்குச் சென்று விடுவார்.
அமெரிக்காவின் குடியுரிமை பெற்றுள்ள இவரது லட்சியம் ?
"ஒரு அளவுக்கு மேல் சம்பாதித்து - ஓரளவுக்கு பதவி - புகழ் என சாதித்தபின் - போதும் என்கிற மனம் வரவேண்டும். பட்டம் - பதவி - பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. பல விதங்களில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.ரிடையர் ஆனபின் கல்லூரியில் பயிற்றுவிக்கப் போக வேண்டும். அதுவும் வசதியில்லா சாதாரண மாணவர்களுக்கு இலவசமாய்! அடுத்து முன்பு இயலாமல் --விடுபட்டு - கைகூடாமல் போன passionஐ ரசிக்கணும் - தொடரணும்!." என்று மெய் சிலிர்க்கிரார் ரமேஷ்.
- NCM with Hari

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us