மனிதம் போற்றிய மினசோட்டா தமிழ்ச் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மனிதம் போற்றிய மினசோட்டா தமிழ்ச் சங்கம்

ஜூன் 22,2020 

Comments

 'ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே-பாரதியார்

நாம் போற்றும் சான்றோர்களும் ஆன்றோர்களும் கற்றுக்கொடுத்த வழி நடப்பதில் தமிழருக்கு இணையாக யாரையும் கூறமுடியாது.  பல நிறங்களும் பல மொழிகளும் பல கலாச்சாரங்களும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து வாழும் இந்தியாவில் நிறவேற்றுமை என்பது பெரும்பான்மையான களங்களில் இல்லையென்றே சொல்லலாம்।

அதிலும் தமிழ் மக்கள் நல்ல குணம் தேடிப்பழகுவார்களே அன்றி, நிறம் தேடி அல்ல! அதே குணத்தைக்கொண்டு வெளிநாடுகளில் வந்து வசிக்கும் தமிழர்கள் பிற இனத்தவர்க்கோ நிறத்தவர்க்கோ ஏதேனும் பிரச்னை என்றால் சும்மா இருந்துவிடுவார்களா என்ன?

கடந்த மாதம் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் எனும் ஒரு கறுப்பருக்கு நடந்த கொடுமையான வன்முறைச் செயல் உலகையே உலுக்கியது। அதனை எதிர்த்து 6.12.20 அன்று பல மாநில மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்। அதில் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நம் மக்கள் பலர் கலந்து கொண்டு நிறவெறிக்கும் இனவெறிக்கும் எதிராக நம் பாரம்பரிய இசையான 'பறையோசை' எழுப்பி தங்கள் ஆதரவை வெளிக்காட்டினர்।

பறையிசையின் ஒலிக்கு அங்கு கூடியிருந்த ஆண்களும் பெண்களும் ஆடி அதிர்வை எழுப்பியது மறக்கவே முடியாத ஒன்று!
அமெரிக்கர்கள் நம் மக்களை கட்டியணைத்து நன்றி தெரிவித்தனர்!

எங்கும் எப்போதும் அநியாயத்தைக் கண்டு ஒதுங்காமல்,போராடும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்!

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us