ஆக்லாந்தில் பக்த சங்கீர்த்தனம் சமாஜம் சார்பில் சங்கீத உபன்யாசம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் பக்த சங்கீர்த்தனம் சமாஜம் சார்பில் சங்கீத உபன்யாசம்

ஜூன் 23,2020 

Comments

ஆக்லாந்தில் பக்த சங்கீர்த்தனம் சமாஜம் சென்ற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜூன் 19 மற்றும் 20 தேதிகளில் மாலை 6 மணியளவில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் இசைவாணி ஶ்ரீமதி விசாகாஹரியின் சங்கீத உபன்யாசத்திற்கு வலைத்தளம் மூலமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சமாஜத்தின் தலைவர் ஶ்ரீகுமார்ஹரி இந்த வருடம் ஆக்லாந்தில் கொரானா என்ற தொற்றுநோய்க்காரணமாக தியாகராஜ ஆராதனை நடைபெறவில்லை என்றும் அதை முன்னிட்டு ஶ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி விளக்கமளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஶ்ரீமதி சந்திரா சங்கரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஶ்ரீமதி விசாகாஹரி உபன்யாசத்தை தொடங்கினார்.

ஶ்ரீதியாகராஜர் இயற்றிய கர்நாடக சங்கீத உலகில் மிகச்சிறந்ததாகப் போற்றப்படுவது 'பஞ்சரத்ன கீர்த்தனைகள்' ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாக்க் கருதப்படும் நாட்டை, கெளளை, ஆரபி, வராளி மற்றும் ஶ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில்ஶ்ரீ தியாகபிரம்மம் அவர்கள், தான் வணங்கிய ஶ்ரீராம்பிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்களும் ஐந்து விலைமதிப்பில்லா ஐந்து ரத்னங்களுக்கு ஒப்பாகும்.
வெள்ளிக்கிழமை தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடலை பாடி அழகான கதைகளுடன் விளக்கமளித்தார். ஶ்ரீநரஹரி பாகவதரின் சிவபக்தி எப்படி பாண்டுரங்கனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது பற்றியும் நாமதேவரின் பக்தியையும் மேற்கோள் காட்டி கூறினார். அதைத் தொடர்ந்து, கெளளை ராகம் ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற கீர்த்தனையையும் பாடி விளக்கமளித்தார்.
மறுநாள் சனியன்று செளராஷ்டிர ராகத்தில். அமைந்த ஶ்ரீகணபதினிம் பாடலோடு நிகழ்ச்சியைத் தொடங்கினார். பின் ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்செநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய கீர்த்தனைகளையும் பாடி அழகான விளக்கங்களுடன் கூறி முடித்தார். அவருடன் பக்க வாத்யமாக ஶ்ரீ ரவி மிருதங்கம் இசைத்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஶ்ரீ அசோக்குமார் அவர்கள் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சியை வலைத்தளம்மூலமாகவும் முகநூல் மூலமாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர்

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்


Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us