வட கரோலினா, சார்லெட் - நவயுக 'சக்தி' | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வட கரோலினா, சார்லெட் - நவயுக 'சக்தி'

ஜூன் 24,2020 

Comments

 “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!”- பாரதியார்.போற்றப்பட வேண்டிய பெண்கள், தூற்றப்படும் போதும் உதவி தேவைப்படும் போதும், நாங்கள் இருக்கிறோம் என்று தோள் கொடுக்க தோன்றியவர்களே சார்லெட்டில் இருக்கும் இந்த பெண்கள் குழு- ‘சக்தி’ முக்கியமாக இங்கு வாழும் தெற்காசியப் பெண்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்। டொமெஸ்டிக் வயலென்ஸ் எனப்படும் குடும்ப உறுப்பினர்களால் நடக்கும் கொடுமைகளில் இருந்து அப்பெண்களை காக்கும் நோக்கத்தில் ஆதரவு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்। மேலும் வேலைவாய்ப்பு, கல்விக்கு உதவுதல் போன்றும் சிறப்புடன் செயல்படுகின்றனர்। இது மட்டுமல்லாமல் 'Ask a friend' எனும் அவசர அழைப்பு எண் உண்டு। இதன் மூலம் புதிதாய் குடி வருப்பவர்கள், மாணவர்கள் என பலரும் உதவி பெறலாம்।இந்த நோய்த்தொற்று நேரத்தில் இவர்கள் சார்லெட் கம்யூனிட்டியுடனும் இணைந்து சேவைகள் புரிகிறார்கள்। மேலும் யூனியன் கவுண்ட்டி கம்யூனிட்டி ஷெல்டருக்கு 1100 டாலர்கள் நிதி வசூலித்து அளித்துள்ளனர்। COVID 19 உலகையே ஆட்டிவைத்துள்ள இந்நிலையில், தங்கள் உதவிமுறைகளை வேறு மாதிரியாக மாற்றிக் கொண்டுள்ளனர்। சார்லெட் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலும் மிக மிக அவசியமானதும் பேருதவியுமான கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் பிரசவத்திற்கு தயார் நிலையில் இருக்கும் பெண்கள் எனக் கண்டறிந்து அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்க ஆரம்பித்தனர்। இதற்கென தன்னார்வலக்குழுக்களை ஏற்படுத்தி
உணவு தயாரிப்பு, அதனை உரிய வீடுகளுக்கு கொண்டு போய்க் கொடுத்தல் போன்று தீவிரமாய் செயல்பட்டு வருகின்றனர்। இங்கு ஆரம்பித்த இந்த உதவி மனப்பான்மை இன்று உலகில் பல பகுதிகளில் பரவி இவர்களின் தன்னார்வலர்களாய் பலர் உருவாகி உதவி செய்யத் துவங்கிவிட்டனர்। பெற்றோர்கள் உடன் இருந்து கவனித்துக்கொள்ள முடியாத இச்சூழ்நிலையில் இந்த 'சக்தி' குழுவினர் மாபெரும் சக்திகளாய் செயலாற்றி வருவது மிக மிக பாராட்டுதலுக்குரியது! அவசர உதவிகள் தேவைப்படுவோர் நிச்சயமாக உன்னதமான சேவை செய்து வரும் 'சக்தி' குழுவினரை கீழே குறிப்பிட்டுள்ள தொடர்பின் மூலம் அணுகலாம்। Links to Shakthi
http://www.womenshakthi.org/Link to Shakthi Help Pregnant Women facebook group.
https://www.facebook.com/groups/339688960350585/?ref=share

-நமது செய்தியாளர் ஷீலா ரமணன்Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us