கண்ணதாசனைக் கொண்டாடுவோம்: இணையப் பெருவெளியில் ஆத்மார்த்தமானதொரு படைப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கண்ணதாசனைக் கொண்டாடுவோம்: இணையப் பெருவெளியில் ஆத்மார்த்தமானதொரு படைப்பு

ஜூன் 25,2020 

Comments

 ஆஸ்திரேலியத் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் வழங்கிய கவியரசு கண்ணதாசனின் 93 ஆவதுபிறந்த நாள் பெரு நிகழ்வு இணைய வான் பரப்பில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி வெகு சிறப்பாக அரங்கேறியது.
கலைமாமணி இசைக்கவி இரமணன் அவர்கள் கண்ணதாசன் பாடல்களில் வாழும் இலக்கியச் சிறப்பு, கவி நயம், வாழ்வியல் தத்துவங்கள் இவற்றையெல்லாம் தெள்ளு தமிழில் பேசி, தேமதுரக் குரலில் பாடி வெகு அழகானதொரு பிறந்த நாள் பரிசைப் படைத்தார்.
இந்த நிகழ்வை ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு அனகன் பாபு, மற்றும் செயலாளர் திரு கர்ணன் ஆகியோர் திறம்பட ஒருங்கமைத்து Facebook மற்றும் YouTube ஆகியதளங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்தனர். சிட்னியில் வாழும் வானொலி ஊடகர் திரு கானா பிரபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
ஊடக அனுசரணையாளர்களாக தமிழகத்தின் முன்னணி நாளேடு தினமலர் நாளிதழ் சமகாலத்தில் தம் தளத்தில் நேரஞ்சல் செய்ததோடு, புதுயுகம் தொலைக்காட்சி நிறுவனத்தினரும் இணைந்து கொண்டனர்.
கடந்த 9 வருடங்களாகக் கலைக்கும் தமிழினதுக்கும் தன் செயற்பாட்டைக் காட்டும் இயக்கமாக விளங்கும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம், சிட்னியில் சித்திரைத் திருவிழா என்ற பண்பாட்டுத் திருவிழாவை வருடம் தோறும் நாள் முழுக்காக் கொண்டாடி மகிழும் அதே வேளை இனிய இலக்கியச் சந்திப்பு, தமிழிசை நாட்டிய விழா போன்ற நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.
தமிழரது பண்பாட்டு அடையாளமாம் தைப்பொங்கல் விழாவை நியூ சவுத்வேல் மாநிலப் பாராளுமன்றத்திலும், தலை நகர் கான்பராவில் விளங்கும் தேசியப் பாராளுமன்றத்திலும் விழா எடுத்து நம் பண்பாட்டுப் பெருமையை சக சமூகத்தினருக்கும் பறை சாற்றும் அமைப்பு,
மனித நேயப் பணிகளாக கஜா புயல்,சென்னை வெள்ள அனர்த்தம், ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த காட்டுத்தீ அனர்த்தம் உள்ளிட்ட பல இடர்களுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டித் துயர் துடைப்பு நிவாரணப்பணிகளை வழங்கியிருப்பது அதன் இன்னோர் முகம்.
கொரோனா காலத்தில் நம் தமிழக கிராமியக் கலைஞர்களுக்கான நல ஆதாரத்தை வேண்டி பாடகர்கள்ஆண்டனி தாசன், செந்தில், ராஜலட்சுமி ஜோடியோடு இணைந்து இணையவழி நிதி சேகரிப்பை நடத்திஅந்தப் பணத்தை உடன் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலில் இணைய வழி வான் பரப்பில் சிறந்ததோர் படைப்பை வழங்க இசைக்கவி இரமணன் அவர்கள் மிகச் கச்சிதமான தேர்வாகத் தோன்றி, இணைந்த இரசிகர்களைமகிழ்ச்சியிலும், நெகிழ்விலுமாகக் கண்ணதாசன் பாடல்களின் அடியாழம் வரை சிலாகித்துப் பேசிஅருமையானதொரு படையலை வழங்கிச் சிறப்பித்தார்.
இன்னும் வேண்டும் என்று கேட்ட இரசிகர்களுக்கான கேள்வி நேரத்திலும் பன்முகப்பட்ட கேள்விகளுக்குமுகம் கொடுத்து இரமணன் அவர்கள் பொருத்தமான பதில்களோடு நிறைவாக்கியது குறிப்பிடத்தக்கதொரு விடயம்.
நிகழ்வின் காணொளியை பார்க்க:

https://www.youtube.com/watch?v=pUp80ZS_YQA

தினமலர் இணையதளத்தில் பார்க்க:

https://cinema.dinamalar.com/kannadasan/

- தினமலர் வாசகர் அனகன் பாபு (தலைவர், ஆஸ்திரேலியத் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்)
Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021...

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us