உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ததஜ ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்த இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ததஜ ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்த இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜூன் 27,2020 

Comments (2)

சவுதி அரேபியா சுகாதார துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மற்றும் கிங் சவுத் மெடிக்கல் சிட்டி (சுமைஸி) மருத்துவமனையின் மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக கடந்த 13 ஆண்டுக்கு மேலாக இரத்ததான முகாம்கள் மற்றும் அவசர இரத்ததானங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான யூனிட்கள் குருதி கொடையளிக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியில் தற்போதைய கோரோனோ நோய் தொற்று சமயத்திலும் பல யூனிட்கள் இரத்தம் தனமாக தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டுள்ளது, அதன் ஒரு பகுதியாக நடப்பாண்டின் (2020) உலக இரத்ததான தினத்தை முன்னிட்டும், இரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் கொரோனா போன்ற அசாதாரண சூழலில் இரத்த தேவையின் அவசியத்தை கொடையாளிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நன்நோக்கத்தோடு கடந்த 26-06-2020 அன்று ஆன்லைன் மூலமாக நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்ச்சியில் ரியாத் பிராந்திய ஆய்வகம் மற்றும் இரத்த வங்கி இயக்குனர் டாக்டர். இப்ராஹிம் அல் தலீல் அவர்கள் 'இரத்ததானம் செய்பவராக மாறுங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து மாற்று மருந்து சேவைத் துறை நோயியல் மற்றும் மருத்துவ ஆய்வக மருத்துவ நிர்வாகதுறையின் தலைவர் டாக்டர். அம்மார் ஹசன் அல் ஸுஹைர் அவர்கள் 'பாதுகாப்பான இரத்தம் பல உயிர்களை காக்கிறது' என்ற தலைப்பில் உரையாற்றி கொடையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மருத்துவ மற்றும் அறிவியல்பூர்வமாக பதில் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் ரியாத் மண்டல மருத்துவ அணியினர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஜமாஅத்தின் இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்ததுடன், ஜமாஅத்தின் தன்னார்வல தொண்டர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்தது.

ரியாத் மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. அஹ்மது முக்தார் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

மேலும் விவரங்களுக்கு ...TNTJ Riyadh Blood Donation - In chargeAhamed Mukthar +966538534849

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Vijaya Kumari - Chennai,India
30-ஜூன்-202016:18:11 IST Report Abuse
Vijaya Kumari hi
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vijaya Kumari - Chennai,India
30-ஜூன்-202016:05:06 IST Report Abuse
Vijaya Kumari super
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us