செம்மையான செயல்பாட்டில் குவைத் இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கம் ! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

செம்மையான செயல்பாட்டில் குவைத் இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கம் !

ஜூலை 03,2020 

Comments

கைவிளக்கேந்திய நைட்டிங்கேல் அம்மையார் தொடங்கிய செவிலியர் பணி இன்றளவும் உலகம் முழுக்க மனிதத்துவத்துடன் பயணித்துவருகிறது.அதுவும் இந்த கொரோனா யுகத்தில் இதன் அற்பணிப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை- அற்புதம் !
ஒரு துரும்பைக்கூட தேவையானவர்களுக்கு எடுத்துப்போடாத பலரும் ,எல்லாம் தாங்கள் செய்வதுபோல மீடியாக்களில் கூசாமல் பப்லிசிட்டி செய்துகொள்வதை பார்க்கிரோம் . ஆனால் இந்த தமிழ் நர்ஸ்களின் அமைப்பு வித்யாசம் !. ஒரு தேவை அல்லது பிரச்சனை என்றால் ஓடி ஒடி செய்கிறார்கள் -அதுவும் சத்தமில்லாமல்!
குவைத்தில் பல்லாயிரக்கணக்கில் இந்திய நர்ஸ்கள் சேவையாற்றி வருகிறார்கள். இதில் வழக்கம் போல மலையாளிகளுக்கு அடுத்து தமிழ் நர்ஸ்கள் !குவைத்தில் மருத்துவம் சார்ந்த வசதி இல்லாமலும்,முறையான சிகிச்சை வழி தெரியாமலும் அல்லாடும் தொழிலாளர்களுக்கு இந்த அமைப்பு ஒரு லைட்ஹவுஸ் !

நர்ஸ்கள் அமைப்பின் துவக்கம்
இவர்கள் 2015 ஆம் ஆண்டு வரை ஆண் மற்றும் பெண் என இருவேறு தோழமை குழுக்களாக செயல்பட்டுவந்தார்கள் . பிறகு இவை இரண்டும் ஒன்றாக இணைந்து இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கம் என உருபெற்றது. இதில் சுமார் 300 உறுப்பினர்கள் ! தலைவர் திருமதி.ஜோஸ்பின் மேரி, புரவலர் திருமதி.மார்த்தாள் ஜான்சன், ஆலோசகர் திரு. அமீர், செயலாளர் திரு.இராமஜெயம், துணை செயலாளர் திருமதி.தேன்மொழி, துணை தலைவர் திருமதி.உஷா மற்றும் திரு.ஜஸ்டின், பொருளாளர் திருமதி ஐரின் செல்டா மற்றும் திரு.மோகன், ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி சுபலட்சுமி,திரு.ஃபெபின், திரு. செல்வபாண்டியன்,திரு.ஐயப்பன் , ஊடக செயலாளர் திரு.கிங்ஸ்லி, திரு.கோபு.
செயல்பாடுகள்
இந்த அமைப்பின் மூலம் இங்குள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் பயனடையும் விதமாக மிகவும் சீரும் சிறப்புடன் மருத்துவ உதவிகள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்திவருகிறார்கள் .இயலாதவர்களுக்கு அன்றாடம் இலவச மருத்துவ உதவி! 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுதோறும் இக்குழுவில் மே 12 ஆம் நாள் உலக செவிலியர்கள் தினவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. என்னதான் இருந்தாலும் வெளிநாட்டினர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு கவனம் கிடைப்பது என்பது சிரமமே . வழி தெரியாமல் வரும் இந்திய - அதிலும் தமிழக மக்களுக்கு இவர்கள் தனி அக்கறையுடன் கவனம் செலுத்தி அதிலிருந்து மீண்டு வர மனதளவில் ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறார்கள் . குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆலோசகர் திரு.அமீர் வழிகாட்டுதல்படி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்! தமிழோசை கவிஞர் மன்றத்தின் மூலம் இலவச அடிப்படை உடல் பரிசோதனை!.2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து குவைத் இந்திய மருத்துவர்கள் சங்கத்துடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்கள் !
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தை திருநாள் முன்னிட்டு குவைத்தில் சில தமிழ் அமைப்புகள் நடத்தும் கபடி போட்டி நிகழ்வில் இவர்கள் விழா முடியும் வரை முதலுதவி குழுவாக செயல்பட்டு வருகிறார்கள் .
மருத்துவமனை மரணங்களுக்கு அப்பாற்பட்டு, வேலைக்கு வந்த இடத்தில் நம் மக்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் துர் மரணங்கள் நம்மை திக்குமுக்காட வைக்கின்றன .அவற்றில் பலரும் ஆதரவற்றவர்கள். அந்த சம்பவங்கள் மனதை கசக்கி பிழிபவைகள் இறுதி மரியாதைக்காக தாயகம் கொண்டுச் செல்ல இங்கு உள்ள இந்திய தூதரகம் மற்றும் குவைத் அரசாங்கம் என அத்துனை நடைமுறை செயல்களையும் சட்ட்டப்பூர்வம் செய்து விரைவில் தாயகம் கொண்டுச் செல்ல இந்த அமைப்பு உதவி வருகிறது. அத்துடன் அங்கு விமான நிலையத்திலிருந்து உடலை சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்ல இலவச ஆம்புலன்ஸ்ம் ஏற்பாடு செய்கிறார்கள். .இக்காரியங்களுக்காக இதன் செயலாளர் இராமஜெயம் மற்றும் இந்தியன் ஃபிரண்ட்லைனர் சேவை அமைப்பின் செயலாளளர் கீரணி .மதி ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
கொரோனா காலகட்ட தொற்றுநோய் நம்மையும் ஆட்டிபடைக்கின்ற இந்த தருணத்தில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக பசி பட்டினி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் குவைத்திலும் தலைவிரித்தாடிவருகிறது. மக்களின் நலன்கருதி இவர்களுடைய மருத்துவ வேலைபளுவுக்கு மத்தியில் செவிலியர்களின் பங்களிப்போடு சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள உணவும் - உணவு பொருட்களும் குவைத் மட்டுமின்றி தமிழகத்திலும் வழங்கியுள்ளார்கள். விசா புதுப்பிக்காமல் சடடத்திற்கு புறம்பாக தங்கி இருந்தவர்களுக்கு சமீபத்தில் குவைத் அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கிய காலகட்டத்தில் இந்த குழு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து இந்திய தூதரக உதவியுடன் தாயகத்திற்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளதும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று .
தமிழகத்திலும் உதவி
இங்கு மரணிப்பவர்களின் உடல்களை ஊருக்கு அனுப்புவதுடன் அவர்களின் குடும்பங்களுக்குச்ம், பிள்ளைகளின் படிப்புக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது.
இது தவிர மருத்துவ உதவி ,ஏழைகளின் கல்வி, காஜா புயல் நிவாரணம் என பல லட்ச ரூபாய்கள் இந்த அமைப்பு வழங்கி உள்ளது.செவிலியர்கள் என்றாலே அன்பும் அரவணைப்பும் .கண்ணென தகும் !
-NCM with Ramajayam

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us