துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 04,2020 

Comments

துபாய் : ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு சிறப்பு உளவியல் நிகழ்ச்சியினை 03.07.2020 வெள்ளிக்கிழமை மாலை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு அமீரக பிரிவின் பொதுச்செயலாளர் இசாக் தலைமை வகித்தார். துணைத்தலைவர் திருச்சி ஜாபர் சித்திக் முன்னிலை வகித்தார். கவிஞர் கனடா அன்புடன் புகாரி தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சிறப்பு பேச்சாளர் ஃபஜிலா ஆசாத் குறித்த அறிமுகவுரையை முதுவை ஹிதாயத் செய்திருந்தார்.

சர்வதேச உளவியல் நிபுணர் ஃபஜிலா ஆசாத் அவர்கள் நாளை நமதே என்ற தலைப்பில் சிறப்பு உரை நிகழ்த்தினார். இன்றைய நிலையில் நமது மனதை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவரித்தார். இந்த மன உளவியல் நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. மன்னர் மன்னர் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரஹ்மத்துல்லா, திருவாவடுதுறை பஜ்ருதீன், எமிரேட்ஸ் அலாவுதீன், முஹம்மது யஹ்யா உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.


- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us