லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை

ஜூலை 04,2020 

Comments

 ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் தாயகத்தின் தமிழர் நலன் காக்கும் திட்டத்தில், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் புதிதாக 2020-21 ஆம் ஆண்டின் பொறுப்பாளர்கள் முன்னிலையில், வெளிச்சம் பரவட்டும் எனும் லயன்ஸ் மாவட்ட ஆளுநரின் சொல்லுக்கேற்ப, மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை மூலமாக மானம்புச்சாவடி பள்ளிவாசல் அருகில் வசிக்கின்ற மீன் மார்க்கெட் தொழிலாளி ரபிக் அவர்களின் மருத்துவச் செலவுக்காக ரூ 30,000 மற்றும் அவர் குடும்பத்தினரின் மாதச்செலவுக்கு ரூ 5,000 காசோலையாக அவர் மகனிடம் இன்று காலை வழங்கப்பட்டது.

நிகழ்வில் தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் தலைவர் லயன் ஷாகுல் ஹமீது, செயலாளர் லயன் சம்பத், பொருளாளர் லயன் கண்ணன், மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் லயன் அப்துல்லாஹ், செயலாளர் லயன் காளித் அகமது, பொருளாளர் லயன் வாசிம் ராஜா வசந்தம் லயன் ஷம்சுதீன், ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதி லயன் ஸ்டாலின் பீட்டர் பாபு மற்றும் எம்.சாவடி பள்ளியைச் சேர்ந்த லயன் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாதமும் இந்தக் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்க சவுதி அரேபியாவில் தமிழ் மக்களுக்குச் சேவை செய்து வருகின்ற ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்றுள்ளதாக அதன் தலைவர் வசந்தம் லயன்ஸ் லயன் ஹாஜி ஜெம்ஸ் ஜாஹிர் உசேன் கூறியுள்ளார். இந்தச் சேவை ஒரு வருட காலத்திற்கு நடைபெறும் ஓர் தொடர் சேவையாகும்.
மேலும் மருத்துவர் தினத்தையும் கொண்டாடிய தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தினர் ஜூலியானா இல்லத்திற்கு ரூ 5000 மதிப்புள்ள பொருட்களையும் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

- ஜாகிர் ஹுசைன் ஷர்புதீன்


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us