நைஜீரியாவில் லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3

ஜூலை 08,2020 

Comments

லேகோஸ் : நைஜீரியாவின் லேகோஸ் நகரில் ஸ்வரயாத்ரா லிட்டில் சாம்ப்ஸ் - சீசன் 3 கடந்த ஞாயிறு அன்று வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. கொரோனா என்று உலகம் நிசப்தமாக, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த இசைப்போட்டி மௌனமானது. இணைய தளத்தில் மெதுவாக உலகம் இயங்க அதையே களமாக மாற்றி நைஜீரியா மற்றும் கானா நாட்டின் இந்திய சமூகத்தை ஒரு மாத காலம் உரக்கப்பேச வைத்துவிட்டார்கள் ஸ்வரயாத்ரா குழு அமைப்பாளர்கள்.
வயதின் அடிப்படையில் 3 பிரிவுகளாக்கி அதில் பாட்டு மற்றும் இந்திய, மேற்கத்திய இசைவாத்தியங்கள் என்று மொத்தம் 9 பிரிவுகளில் கடந்த மே மாதம் கடைசி வாரம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதில் தொடங்கி ஜூலை 4,5 தேதிகளில் ஃபேஸ்புக்கில் லைவ் இறுதிச்சுற்று நடத்தி திறமைக்கு முன்னுரிமை அளித்து வெற்றியாளர்களை தேர்வு செய்தது.
இந்தியாவிலிருந்து நடுவர்களும் ஸ்வரயாத்ரா ஃபேஸ்புக் பேஜ் மூலம் இறுதிச்சுற்றில் பங்கேற்றனர்.
ஜூலை 4ம் தேதி, இசை கருவிகளை வாசிக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டிற்கு மலையாள இசையமைப்பாளர், கீபோர்ட் கலைஞர் கௌதம் வின்சென்ட், மும்பையிலிருந்து தபலா வல்லுனர் அவினாஷ் பாட்டீல் நடுவர்களாக இருந்து அனைத்து குழந்தைகளின் செயல்திறன்களையும் ஆராய்ந்து தேர்வு செய்தனர்.
ஜூலை 5ம் தேதி, வோக்கல் பிரிவிற்கு நைஜீரியாவில் வசிக்கும் இசை வல்லுனர் ஆஷா அஜய், மும்பையிலிருந்து பிரசாந்த் நசேரி நடுவர்களாக இருந்து கடுமையான போட்டியில் திறமையாளர்களை தேர்வு செய்தனர்.
ஸ்வரயாத்ரா குழுவினர் அனைவருக்கும், குறிப்பாக அதன் தலைவர் பல்லவி ஷாங்கே பெரும் முயற்சி வெற்றி அடைந்ததற்கு பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இ-சான்றிதழ் வழங்கி உள்ளதோடு SABHA கோவிட்-19 நிதிக்கு கணிசமான தொகையையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us