இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பிய இந்தியர்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பிய இந்தியர்கள்

ஜூலை 09,2020 

Comments

 ஜகர்த்தா : கொரோனா கிருமித்தொற்று காரணமாக அனைத்துலக விமான சேவைகள் முடங்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் பயணிகள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
இந்தோனேசியாவிலும் கூட வியாபார நிமித்தமாகவும், சுற்றுலா நிமித்தமாகவும் வந்த பலர் இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இருந்தனர். அதிலும் குறிப்பாக இந்தோனேசியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு மீட்பு விமானமும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம், இந்தோனேசியாவில் இருந்து தமிழகம் செல்ல விரும்பியவர்களுக்காக, ஒரு மீட்பு விமானத்தை ஏற்பாடு செய்யும் முயற்சியை ஏப்ரல் மாதம் தொடங்கியது.

இதற்காக இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் மிகக் கடுமையாக பாடுபட்டது. இந்தோனேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன், இந்திய அரசு உயர் அதிகாரிகளிடமும், இந்தோனேசிய அரசு உயர் அதிகாரிகளிடமும் அனுமதி பெற்றது. பிறகு ஏர் ஏசியா விமான போக்குவரத்துடன் பேசி, ஜூலை 7,2020 பயணத்திற்கு இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்தது.
169 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் QZ980 கடந்த செவ்வாய் கிழமை (ஜூலை 7,2020) பத்திரமாக திருச்சி வந்தடைந்தது .இதில் 5 கர்ப்பிணி பெண்களும்,80 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழர்கள் மட்டுமல்லாது 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக உதவி புரிந்த இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும், இந்தோனேசிய உயர் அதிகாரிகளுக்கும், ஏர் ஏசியா குழுமத்திற்கும், இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் தன் மேலான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
– தினமலர் வாசகர் ஆர்.ரமேஷ்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us