இணையவழியில் நடந்த வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ்விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இணையவழியில் நடந்த வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தமிழ்விழா

ஜூலை 10,2020 

Comments

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வடஅமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் 2020 ம் ஆண்டிற்கான தமிழ்விழா இணைய வழியில் ஜூலை 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. ஜூலை 3 ம் தேதியன்று தொழில்முனைவோர் மாநாடு, தமிழ்மறை ஓதுதல், சிறப்பு சொற்பொழிவு,கவியரங்கம் ஆகியன நடைபெற்றன. அன்றைய தினம் சிறப்பு சொற்பொழிவில் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், உதயசந்திரன் ஐஏஎஸ் ஆகியோரும், கவியரங்கத்தில் கவிக்கோ ஞானச்செல்வனும் பங்கேற்றனர். ஜூலை 4ம் தேதியன்று தமிழ் மரபு என்ற தலைப்பில் பேராசிரியர் தொ.பரமசிவனின் சிறப்பு சொற்பொழிவும், தஞ்சை மாரிமுத்து குழுவினரின் மக்களிசை, சமர்ப்பா குமரன் குழுவினரின் இசைத்தமிழ், தாய் தமிழ்ப்பள்ளிகள் என்ற தலைப்பில் பேராசிரியை கல்யாணியின் சொற்பொழிவு நடைபெற்றது. வர்மக்கலை குறித்து முனைவர்.நா.சண்முகம் உரையாற்ற, இயற்கை வளங்களும் தமிழர் உரிமைகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயராமன் சொற்பொழிவாற்றினார். பிற்பகலில் இளையோர் அமர்வும், சங்கங்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் அழகு தமிழ் பழகு ! பழகு தமிழ் அழகு என்ற தலைப்பில் நிர்மலா பெரியசாமி, சமுதாய முன்னேற்றத்தில் நம்மில் ஒரு தலைவன் என்ற தலைப்பில் அண்ணாமலை ஐபிஎஸ் ஆகியோரின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. திரை நட்சத்திர நேரத்தில் நடிகர்கள் யோகிபாபு,செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், சமூக ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான தாக்கம் யாரிடம் அதிகம் – ஆண்களிடமா? பெண்களிடமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஜூலை 5 ம் தேதி தமிழில் குடமுழுக்கு என்ற தலைப்பில் சத்தியவேல் முருகனார் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து மரபிசை, உலக தமிழர் விழிப்புணர்வு நேரம் ஆகியன நிகழ்வுகள் இடம்பெற்றன. மெல்லிசை நிகழ்ச்சியில் பாடகர் ஸ்ரீநிவாஸ், சரண்யா ஸ்ரீநிவாஸ்,தீபக்,பரீதா, சுருதி பாலமுரளி, லிட்டில் அகானா, ஸ்ரீசக்தி ஆகியோர் பங்கேற்றனர். இணையவழியில் நடைபெற்ற இந்த 3 நாள் நிகழ்வுகளும் வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவையின் (FeTNA) யூட்யூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளை ஏராளமானோர் தங்களின் இருப்பிடத்தில் இருந்து இணையதளம் மூலம் கண்டுகளித்தனர்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement

தற்போதைய செய்தி

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us