ரியாத்தில் அவசர ரத்த தான முகாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரியாத்தில் அவசர ரத்த தான முகாம்

ஜூலை 11,2020 

Comments

“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்” சார்பாக 10.07.2020 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “105வது அவசர இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
கொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் “76 நபர்கள்” ரியாத் மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து கலந்து கொண்டனர். உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு “66 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னார்வலர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் இரத்த வங்கி வளாகத்தில் ஒன்று கூடுதல் தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும் சவூதி சுகாதாரத்துறை (MOH) மற்றும் உலக சுகாதாராத்துறை (WHO) அறிவுறுத்தலின் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக குருதிக் கொடையாளர்களின் பாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள், சானிடைசர், கையுறைகள்” போன்ற நோய்ப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் இரத்த வங்கி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரியாத் மண்டல இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சகோ. அஹமது முக்தார் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக கொரோனோ நோய்த் தொற்று அச்சுறுத்தல் உள்ள சமகாலத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட யூனிட்கள் இரத்தம் அவசர கால தேவைகள் கருதி வழங்கப்பட்டுள்ளது என்றும் இது போன்ற சமூக மற்றும் மனிதநேயப் பணியை பாராட்டி, அதற்குரிய அங்கீகாரமாக சவுதி அரசாங்கத்தின் சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளோம். இதுபோன்ற இரத்ததான முகாம்கள் நடத்துவதின் நோக்கத்தை சொல்வதென்றால், “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய நோக்கத்தைத் தவிர வேறெதுவுமில்லை. இன்னும் முத்தாய்ப்பாக சொல்வதென்றால், “யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் 5:32" என்ற அல்குர்ஆன் வசனத்தை நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லீம்கள் மனித நேயத்தை நேசிக்கக் கூடியவர்கள், பிறர் நலம் பேணக் கூடியவர்கள் என்று உலகிற்கு பறைசாற்றும் முகமாகவும், இஸ்லாத்தின் மீதும், முஸ்லீம்கள் மீதும் ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான பார்வையை போக்கிடவும் இந்த மகத்தான பணிகளை தொடர்ந்து பல வருடங்களாக செய்து வருவதாகக் கூறினார்.
இம்முகாமில் “சித்தீன், ஒலையா, பத்தாஹ், கதீம் செனையா” ஆகிய கிளைகளிலிருந்து தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். உணவு மற்றும் வாகன ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகளுடன் இணைந்து மண்டல நிர்வாகிகள் செய்திருந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனை இயக்குனர் அம்மார் அல் ஜூஹைர் நன்றி தெரிவித்தார்.

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us