அமீரகத்தில் இருந்து தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமீரகத்தில் இருந்து தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட தமிழர்கள்

ஜூலை 12,2020 

Comments

அமீரகம் ராஸ் அல் கைமாவில் இருந்து PIOCCI – FOI – KNA அமைப்பு சார்பில் மதுரை செல்ல சிறப்பு விமானம் \uD83C\uDF38\uD83C\uDF38 ஏற்பாடு செய்யப்பட்டது.அமீரகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களுக்கு உதவும் நோக்கில் FOI மற்றும் PIOCCI அமைப்பு மற்றும் KNA அமைப்பு சேர்ந்து மதுரை க்கு செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது .இதற்காக spicejet விமான நிறுவனத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் மதுரைக்கு இன்று மதியம் 175 பேர் பத்திரமாக அனுப்பி வைக்க பட்டனர் . இதில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் போன்றோர் அனுப்பி வைக்க பட்டனர்.அவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் பேருந்து மூலம் மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தங்கும் வசதி மற்றும் உணவு வசதி இலவசமாக செய்து தரப்பட உள்ளது.இந்த முன்னேற்பாடுக்கு முதலில் எங்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்த தமிழக செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும் விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்த தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் திரு. பன்னீர் செல்வம் அவர்களுக்கும் முதலில் நன்றியினை KNA அமைப்பு சார்பில் தெரிவித்து கொள்கிறோம் .மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மதுரை பேரிடர் மேலாண்மை பொறுப்பு திரு கண்ணன் அவர்களுக்கும் அமீரகத்தில் இருந்து மதுரை சென்றோருக்கு தங்குவதற்கு மற்றும் உணவு வசதி செய்து கொடுத்த மதுரை திருமலை நாயக்கர் கல்லூரி நிர்வாக செயலாளர் திரு விஜயராகவன் அவர்களுக்கும் KNA சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.இவர்களுடன் கூட ஒத்துழைப்பு கொடுத்த POICCI அமைப்பின் செயலாளர் திரு வெங்கடேஷ் மற்றும் திரு ராஜாராமன் மற்றும் திரு பார்த்தசாரதி அவர்களுக்கும் என்னுடன் கூட இருந்து வலது கரம் போல் செயல்பட்ட சுதாகர் கண்ணன் அவர்களுக்கும் மற்றும் மருத்துவர்கள் திரு பிரகாஷ் அவர்களுக்கும், திரு ராமேஸ்வரன் அவர்களுக்கும், மேலும் அமெரிக்கா திரு ராஜ்மோகன் அவர்களுக்கும் மதுரையில் வருபவர்களை நல்லபடியாக வரவேற்று அவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் திரு ராம்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us