அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் திருச்சிக்கு சிறப்பு விமானம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் திருச்சிக்கு சிறப்பு விமானம்

ஜூலை 30,2020 

Comments

அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கம் தனது இரண்டாவது தனி விமான சேவையை 27/07/2020 அன்று அபுதாபியிலிருந்து தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாநகருக்கு இயக்கியது.
அபுதாபி வரலாற்றில் முதல் முறையாக குறுகியகால அறிவிப்பில் தனி விமான சேவையை அமீரகத் தலைநகர் அபுதாபியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கி அய்மான் சங்கம் சரித்திர சாதனை படைத்துள்ளது.
அய்மான் சங்கத்தின் மீது அமீரக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால்,தொடர்ந்து நீங்கள் அடுத்து விமானத்தை இயக்கவேண்டும்,நாங்களும் அந்த விமானத்தில் தான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டாவது விமான சேவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடுமையான உழைப்பிற்கு பின் 26/07/2020 மாலை 5 மணியளவில் போதுமான பயணிகள் ஊர்ஜிதப்படுத்தப் பட்டார்கள். உடனடியாக சில மணி நேரங்களில் அவர்களுக்கான விமான பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த அரும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்த அய்மான் சங்க நிர்வாகிகள் உழைப்பில் முதிர்ச்சிப் பெற்று, எந்த காரியங்கள் எப்போது வந்தாலும் அதை சாதிக்க துணிந்து நிற்பவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்..
இருப்பினும் அய்மான் சங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் காரணத்தால் மிக கூடுதலான பயணிகள் குறைவின்றி பதிவு செய்து இந்த திட்டங்கள் நிறைவேற பயணிகளின் உற்சாகம் ஊக்கம் அளித்தது. இந்த சேவை சிறப்பாக அமைய அய்மான் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை.ஷாஹுல் ஹமீத், முன்னாள் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது, அய்மான் துணைத் தலைவர் கீழக்கரை ஜமால்,பொருளாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைப் பொருளாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,மக்கள் தொடர்பு செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா,அய்மான் பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,மார்க்கத் துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம்,செயற்குழு உறுப்பினர்கள் அதிரை.மாலிக், தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன், துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா உள்ளிட்ட மக்கள் சேவகர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டனர்.
தமிழ் மக்கள் மன்றத் தலைவர் சிவக்குமார்,அமீரக காயிதேமில்லத் பேரவை துணைப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி, சொக்கம்பட்டி கபீர்,மக்கி பைசல்,ஜிஃப்ரி உள்ளிட்ட QMF நிர்வாகிகளும் தங்களது பங்களிப்பினை வழங்கினர். ராயல் சில்க்ஸ் நிறுவனத்திற்கும்,அதன் உரிமையாளர்களான சகோதரர்கள் மொய்தீன்,அஜ்மீர் ஆகியோருகம் அய்மானின் பணிகளுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
திருச்சி விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் விமானத் துறை ஆய்வாளர் உபைதுல்லாஹ்,திருச்சியில் தனிமைப்படுத்தும் பணிகளை ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைத்து வரும் IUML மாவட்டச் செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான்,முஸ்லிம் மாணவர் பேரவை மாநிலப் பொதுச் செயலாளர் அன்சர் அலி, ஹுமாயூன் உள்ளிட்ட முஸ்லிம் லீக் குழுவினர் அனைவரும் இந்த பணியில் உதவினர்.
விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தும் முகாமிற்கு பயணிகளை அழைத்துச் செல்ல அய்மான் மகளிர் கல்லூரி வாகனங்களை வழங்கி உதவி புரிந்த தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி, கல்லூரி செயலாளர் ஹபீபுல்லாஹ் காகா ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் தலைவர் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுஸைன் சித்தீகி,முன்னாள் பொதுச் செயலாளர் கீழக்கரை சையது ஜாபர் காகா, ராம பிரச்சன்னா உள்ளிட்டோரும் இந்த பணிகளுக்கு உற்சாகமூட்டினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்டெடுக்கும் நாயகர்களாகத் திகழும் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் ஜனாப்.கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சாஹிப் MLA, முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடா ஜனாப்.கே.நவாஸ் கனி சாஹிப் MP ஆகியோரும் இந்த பணிகள் வெற்றிகரமாக நடக்க உதவியாக இருந்தனர்.--- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us