சிங்கப்பூரில் விடுதலை நாள் பன்னாட்டு கவியரங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் விடுதலை நாள் பன்னாட்டு கவியரங்கம்

ஆகஸ்ட் 04,2020 

Comments

சிங்கப்பூர் : "வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் பொழில் விடுநலை நாள் பன்னாட்டுக் கவியரங்க நிகழ்ச்சி 02-08-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெற்றது.
சிங்கப்பூர் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" என்ற தமிழ் அமைப்பின் மாபெரும் இரண்டாவது கவியரங்கமாக விடுதலை நாள் பன்னாட்டுக் கவியரங்கத்தில் முனைவர் தேன்மொழியாள், அமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றியச் சிறுகுறிப்போடு, கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வந்த ஆசிரியை மஹ்ஜபின், கவிபாட வந்திருந்த கவிஞர்கள் அனைவரையும் தனித்தனியே சிறு அறிமுகம் தந்து வரவேற்று மகிழ்ந்தார். இணையம்வழி இணைந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த பார்வையாளர்களையும் வரவேற்றார். வாழ்வியல் இலக்கியப் பொழில் என்பது ஓர் அழகிய தேன்கூடு என வெகுவாக பாராட்டி மகிழ்ந்தார்.
பல்வேறு நாடுகளில் இருந்து குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் விடுதலை நாள் அல்லது தேசிய நாள் கொண்டாடும் நாடுகளைச் சேர்ந்த கவிஞர்கள் 18 பேர் கலந்துகொள்ளும் பன்னாட்டுக் கவியரங்கத்தில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இந்தியா மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளில் இருந்தும், கூடுதலாக இலங்கை நாட்டிலிருந்தும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
“சுதந்திரம் என்பது …?” என்ற கவியரங்க தலைப்பிற்கு, சிங்கப்பூர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்ற இந்த கவியரங்கத்தில், சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூரை சேர்ந்த புலவர் இராம.வள்ளியப்பன் தொடக்கக் கவியாக சுதந்திரம் என்பது கடமை என்ற துணைத்தலைப்பில் கவிதையைப் படைத்தார். அவரை தொடர்ந்து வந்த 18 கவிஞர்கள் கவி பாடினர். உரிமை; பொறுப்பு; கடமை; வாழ்வு; மனிதநேயம், அடிமை ஆகிய துணைத்தலைப்புகளில் கவி பாடினர்.
மனிதநேயம் என்ற துணைத்தலைப்பில் சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து கவிஞர் சரளா விமலராசா; புதுச்சேரியிலிருந்து கவிஞர் சு.சிவசுப்பிரமணியன்; உடுமலையிலிருந்து கவிஞர் சு. ஈஸ்வரன்; மலேசியாவிலிருந்து கவிஞர் கலைவாணி மோகன்; சென்னையிலிருந்து கவிஞர் சியாமளா ரகுநாதன் ஆகியோரும், கடமை என்ற துணைத்தலைப்பில் சிங்கப்பூரிலிருந்து கவிஞர் இரமேஷ்குமார், முனைவர் இராஜி ஶ்ரீனிவாசன்; சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்து கவிஞர் பிரியா மூர்த்தி; சென்னையிலிருந்து கவிஞர் கு.ஜெயக்குமாரி ஆகியோரும், அடிமை என்ற துணைத்தலைப்பில் காரைக்குடியிலிருந்து கவிஞர் சபீதா பானு; புதுச்சேரியிலிருந்து கவிஞர் சத்யபாரதி ஆகியோரும், உரிமை என்ற துணைத்தலைப்பில் கவிஞர் கா.பெரியசாமி; மலேசியாவிலிருந்து கவிஞர் ஜெயங்கொண்டம் சாமி; புதுச்சேரியிலிருந்து கவிஞர் க.சரவணன்; இலங்கையிலிருந்து கவிஞர் ராணி சீதரன் ஆகியோரும், வாழ்வு என்ற துணைத்தலைப்பில் ஓசூரிலிருந்து கவிஞர் மணிமேகலை மற்றும் பொறுப்பு என்ற துணைத்தலைப்பில் சிங்கப்பூரிலிருந்து கவிஞர் முத்து.இராஜசேகரன்; ஆசிரியை கலைவாணி இளங்கோ ஆகியோரும் கவி படைத்தனர்.
பொழிலில் புத்தம்புது முறையில் கவியரங்க இலக்கணம் – பொதுவாக கவியரங்கம் என்றால் என்றால் கவி பாடுவோர் தமிழ் வணக்கம், தலைமை வணக்கம், அவை வணக்கம் என தொடங்கி தம் கவிதையை ஒரே சுற்றில் வாசிப்பார்கள். தமிழ்க் கவியரங்க உலகில் முதன்முறையாக இரண்டு சுற்றுகளாக அமைந்த இந்த கவியரங்கத்தில், கவிஞர்கள் தமிழ் வணக்கம்; தலைமை வணக்கம்; சக கவிஞர்கள் வணக்கம்; அவை வணக்கம்; துணைத்தலைப்பிற்கு கவிதை முக்கால் பாகமும் என முதல் சுற்றில் அமைய 19 பேரும் கவிபாடிய பின்னர் இரண்டாம் சுற்றில் கால் பாகம் துணைத்தலைப்பிற்கு கவிதை பாடி நிறைவாக இந்த சமுதாயத்திற்கு தேவையான தம் கருத்தை வலியுறுத்தியும், தமிழுக்கு நன்றியுரைக்கும் வரிகளோடு பாடியது புதுமையாகும்.
இறுதியாக பார்வையாளர்கள் கருத்துரைத்தல் அங்கத்தில் இருவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. காரைக்குடியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த முனைவர் ரேவதி இருவரும் இந்த கவியரங்கத்தின் தனித்துவம் பற்றி பேசியது போற்றுதற்குரியது. தொடக்கம் முதலே முனைவர் தேன்மொழியாள் அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்திய விதம் அருமை. பங்கெடுத்த அனைத்து கவிஞர்களுக்கும் இணையம்வழி “பாராட்டுச் சான்றிதழ்” அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
– தினமலர் வாசகர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us