ஊரடங்கில் சுற்றுச்சூழல் உலக சாதனை நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஊரடங்கில் சுற்றுச்சூழல் உலக சாதனை நிகழ்வு

ஆகஸ்ட் 12,2020 

Comments

    கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஊரடங்கில் முடங்கி உள்ள நிலையில் Institution of Green Engineers மற்றும் வருண் ஆதித்யா பவுண்டேஷன் இணைந்து ENVIRONTHON-2020 என்ற சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. ஆக.,8 ம் தேதியன்று உலக சாதனை நிகழ்வாக ,இடைவிடாது 17 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 20 நாடுகளைச் சேர்ந்த,சுமார் 2000 மாணவர்களும், 20,000 பங்கேற்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Zoom செயலி மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 20 நாடுகளைச் சேர்ந்த 20 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதில் பங்கேற்று, உரையாற்றினர். KPRIET சங்கமம் குழுவின் வரவேற்புடன் காலை 7 மணிக்கு துவங்கியது.


Institution of Green Engineers தலைவர் டாக்டர் எல்.ரமேஷ் வரவேற்புரையாற்றினார். வருண் ஆதித்யா பவுண்டேஷன் நிறுவனர் சுபத்ரா ராஜேந்திரன் Republic of Congo வில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ENVIRONTHON-2020 நிகழ்வை துவக்கி வைத்து, துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சவுமியா அன்புமணி,பயோ டைவர்சிட்டி குறித்த முக்கியத்துவம் குறித்து பேசினார்.சுற்றுச்சூழல் குறித்த போட்டிகளும் நடத்தப்பட்டது. 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை சுமார் 15,000 பேர் Youtube மூலம் கண்டுகளித்தனர். செல்வக்குமார் மற்றும் டாக்டர் பாலமுருகன் ஒட்டுமொத்த நிகழ்வையும் ஒருங்கிணைத்து வழங்கினர். ஆக.,8 ம் தேதி துவங்கிய நிகழ்வு ஆக.,9 ம் தேதி அதிகாலை 12.05 மணி வரை நடைபெற்றது. ENVIRONTHON-2020 ஒருங்கிணைப்பு செயலாளர் கோகுலின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தது. 


– தினமலர் வாசகி சுபத்ரா

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us