மலேசிய கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசிய கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

ஆகஸ்ட் 30,2020 

Comments

மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் ஆகஸ்ட் 22 ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சயைாகக் கொண்டாடப்பட்டது. கெம்பாங்கான் சிலாங்கூர் ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டி முனி ஆலயத்தில் மஹா கணபதி ஹோமம், அஷ்டோத்தர் 108 சங்காபிஷேகம் ஆகியன நடத்தப்பட்டன. பெனாங் ஸ்ரீ நாக காளீஸ்வரி அம்மன் ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. செராஸ் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, அவல் பொறி, பழ வகைகள், மோதகம், கொழுக்கட்டை ஆகியன நிவேதனமாக படைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. கோலாலம்பூர் ஸ்ரீ நாகேஸ்வர அம்மன் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் சித்தி–புத்தி சமேத விநாயக மூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. செலாங்கூர் ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தில் விநாயகருக்கு பால், தயிர், பழங்கள், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. புசோங் ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், கலச பூஜை ஆகியன நடத்தப்பட்டது. மாலையில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மூஷிக வாகனத்தில் விநாயகர் ஆலய உள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம், அன்னதானம் ஆகியன வழங்கப்பட்டன.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us