மலேசியாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

செப்டம்பர் 11,2020 

Comments

மலேசியாவின் புக்கிட் திங்கி கிள்ளான் பகுதி அருள்மிகு ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா செப்.,6 ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. அரச மர விநாயகர் , வன்னிமர விநாயகர், கன்னிமூல கணபதி, நந்திகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் செப்.,04 ம் தேதியன்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோ பூஜை, நவகிரக ஹோமம், ஏகாதச ருத்ர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, செப்.,5 ம் தேதி முதல் கால யாக பூஜைகள் துவங்கின. செப்.,06 ம் தேதியன்று காலை 2 ம் கால யாக பூஜைகளைத் தொடர்ந்து, புனிதநீர் நிரம்பிய கலசங்கள் ஆலய வலம் வந்து, பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருவருளை பெற்றுச் சென்றனர். விழாவின் அனைத்து நாட்களும் மாலைப் பொழுதில் கர்நாடக இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us