கல்வியில் அரசியல் பாடத்திட்டம் : உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கல்வியில் அரசியல் பாடத்திட்டம் : உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்

செப்டம்பர் 13,2020 

Comments

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐநா சபைக்கு அழைத்து சென்று கல்வியில் புதுமை என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் செய்து அவர்கள் கருத்துகளை ஐ.நாவில் சமர்ப்பிக்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இதுவரை ஆறு இணைய வழி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் 12-9-2020 அன்று தமிழக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஏழாவது ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் இணைப்புரையாற்றினார்.

நிகழ்வில், இலங்கை எம்.பி.,யும் தமிழ் தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான பி.கஜேந்திர குமார், பப்புவா நியூ கினியா அமைச்சர் சசிந்திரன் முத்துவேல், இலங்கை எம்.பி.,யும், வடக்கு மாகாண முன்னாள் கவர்னருமான சுரேன் ராகவன், கனடா எம்.பி., லோகன் கணபதி மற்றும் கனடாவைச் சேர்ந்த ராஜி பேட்டர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சசிந்தரன் முத்துவேல் பேசும் பொழுது, அரசியல் என்பதைப் பற்றி பெரும்பாலும் தவறான கருத்துக்களே நிலவுகிறது. இளைஞர்களில் அரசியலைப் பற்றி எதிர்மறை கருத்துகளை உள்வாங்கி இருக்கிறார்கள் . ஆனால் உண்மையில் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அரசியல். அரசியல் என்பது ஒரு புனிதமானது என்பதை எதிர் வரும் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். அன்றைய காலத்தில் புனிதமான அரசியல் தலைவர்கள் தங்களுடைய தியாகத்தால் தான் இன்றைக்கு நாம் சுதந்திரம் பெற்று ஒரு முன்னேற்றப்பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . எனவே அரசியலை அனைத்து மாணவர்களும் ஒரு பாடமாக படிக்க வேண்டும் என்று தன் கருத்தை முன்வைத்தார்.

சுரேன் ராகவன் பேசும்பொழுது, இலங்கை தமிழர்களை பொறுத்தவரை கல்வியின் முக்கியத்துவத்தை அதிகம் விரும்பக் கூடியவர்கள். இந்த கல்வியானது எங்கள் தமிழ் மொழி கலாச்சாரத்தை அதிகம் பின்பற்றக் கூடியதாக விரும்புகிறோம். ஏனென்றால் எங்கள் தமிழ் மொழியை நாங்கள் கடவுளுக்கு ஒருபடி அதிகமாகவே நேசிக்கின்றோம். ஏனென்றால் உலகத்திலேயே தமிழ் மொழி தான் மிகவும் பழமையான வரலாற்று சிறப்பு மிகுந்த மொழி.

உலகத்தில் தோன்றிய பல மொழிகள் அழிந்து கொண்டு வருகின்ற நிலையில் குறிப்பாக இயேசுநாதர் பேசிய மொழி இன்றைக்கு இல்லை. அதற்கு காரணம் அதை பேசுவதை குறைத்துக் கொண்டதால் அந்த மொழி அழிந்து போய்விட்டது. எனவே ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அந்த மொழியை பேச்சு மொழியாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கிற சிறப்பான மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. அப்படிப்பட்ட கலாச்சாரம் மிகுந்த இந்த மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் கல்வியில் முக்கிய கூறாக இருக்க வேண்டும் என்று உலகத் தமிழர்கள் விரும்புகிறார்கள், இலங்கை தமிழர்களும் அதை விரும்புகிறோம் என்று பேசினார்.

கனடாவைச் சேர்ந்த ராஜி பேட்டர்சன் பேசுகின்ற பொழுது, அரசியல் மிக முக்கியமானது ஏனென்றால் கிராமப்புறம் முதல் தேசியம் வரை நாட்டின் வளர்ச்சிக்கு அரசியல் தான் முக்கிய பங்காற்றுகிறது. எனவே அப்படிப்பட்ட அரசியலை அனைவரும் பங்கேற்கும் வகையில் இருக்க வேண்டும். பல பேர் விமர்சனங்களுக்கு பயந்து அரசியலுக்கு வருவதை தவிர்க்கிறார்கள், குறிப்பாக பெண்கள். ஒரு நாட்டில் பெண்கள் கல்வியும், பெண்கள் அரசியலும் தான் அந்த நாட்டின் பெரும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இப்படிப்பட்ட அரசியலை மாணவப் பருவத்திலிருந்து பயிற்சி அளிக்க வேண்டும் குறிப்பாக மாணவர்கள் பாராளுமன்றம் களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நேரடியாக அரசியல் செயற்பாடுகளை பார்க்கின்ற பொழுது அவர்கள் உற்சாகமடைந்து எதிர்வரும் நல்ல அரசியல் செய்வதற்கு நல்ல தலைவர்களாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

அன்புமணி ராமதாஸ் பேசும்பொழுது, உலகமே அச்சத்தில் இருந்து கொண்டிருக்கிற. சூழலில் , இந்த சந்திப்பானது மிக முக்கியமாக இருக்கிறது . கொரோனா தொற்று நோயிலிருந்து அனைவரும் தற்காத்துக் கொள்ள வேண்டும் . அச்சம் வேண்டாம் அலட்சியமும் வேண்டாம் எனவே அனைவரும் விழிப்போடும் பாதுகாப்போடும் இருக்க ஒரு மருத்துவராக கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தொழில்துறை பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்ததல்ல , உண்மையான வளர்ச்சி அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சி, பெண்களின் கல்வி , ஆரோக்கியம் போன்றவற்றை சார்ந்தது. அப்படி நம் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்றால் கேள்விக்குறியே. இன்று அரசியலைப் பற்றி இளைஞர்களிடத்தில் முழு விழிப்புணர்வு இல்லை காரணம் இன்றைக்கு நல்ல தலைவர்கள் இல்லை. அன்றைக்கு காமராசர், அண்ணாத்துரை போன்ற சிறந்த தலைவர்கள் இருந்தனர். இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகள் நாங்கள் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று தான் சொல்கிறார்கள் அப்படி எடுத்துக்காட்டான காமராஜர் அவர்களுடைய ஆட்சி, ஊழலற்ற ஆட்சியாக இருந்ததை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார். எனவே அப்படிப்பட்ட அரசியல் வர வேண்டுமென்றால் இளைஞர்கள் தான் வரவேண்டும்.

அரசியல் சாக்கடை என்று ஒதுங்கி செல்லக்கூடாது அதை சுத்தப்படுத்துவதற்கு இளைஞர்கள் வர வேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை நானே ஒரு எடுத்துக்காட்டு. ஒரு இயக்கமாக இருந்து புகைப்பிடித்தலை எதிர்த்தும் மது அருந்துதல் தடுக்கவும் போராடி வந்த நிலையில், அதே அரசியலில் அமைச்சராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரே கையெழுத்தில் நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என்பதை சட்டமாக நடைமுறைப் படுத்த முடிந்தது. இன்னும் பல சொல்லிக் கொண்டெ போகலாம், எனவே இப்படிப்பட்ட மாற்றங்கள் வர வேண்டுமானால் அரசியல் பாடத்திட்டத்தை கல்வியில் சேர்க்க வேண்டும் .அதிகமாக இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் . உலகத் தமிழர்கள் இணைந்து இருக்கிற இந்த நிகழ்ச்சியின் மூலமாக இலங்கை அரசாங்கம் 13ஆவது சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறப் போவதாக சொல்கிறார்கள், அப்படி நடக்க முயற்சித்தால் தமிழக அரசியல் தலைவர்களும் தமிழர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்பதை நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன். என்று ஒவ்வொரு கருத்தையும் விரிவாக எடுத்துரைத்து பேசினார்.

இறுதியாக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் கனடா நாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆலன்தீன் மணியன் நன்றியுரை வழங்கினார்.

– செல்வக்குமார் (தலைவர், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு)

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us