ஷார்ஜாவில் இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜாவில் இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி

செப்டம்பர் 13,2020 

Comments

ஷார்ஜா : ஷார்ஜா எம்.டி.எஸ். ஈவெண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியினை 11.09.2020 வெள்ளிக்கிழமை மெய்நிகர் காணொலி வாயிலாக நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.டி.எஸ். மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது மைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் ,எம்.டி.எஸ். நிறுவனம் இளம் திறமையாளர்களை உலகுக்கு வெளிப்படுத்தும் நிகழ்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார்.

தொடக்கமாக திண்டுக்கல் தஹ்ஷின் இறைவசனங்களை ஓதினார். காயல் ரிபாயி சுல்தான் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அரபி மொழியில் வடிவெழுத்துக்களை தொடர்ந்து எழுதி வரும் எஸ்.ஹெச். மீரா பாஹிமா அந்த துறையில் தனக்கு இருந்து வரும் ஆர்வம் குறித்து விவரித்தார். இந்த வடிவெழுத்துக்களை கண்காட்சியாக பல்வேறு நாடுகளில் வைத்து சர்வதேச சமூகத்துக்கு இதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது ஆசை என்றார். இந்த பணிகளுக்கு தனது பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு அளித்து வருவதை குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் தனது திறமை சென்றடைய உதவி வரும் எம்.டி.எஸ். நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக அரபி மொழித்துறையின் பேராசிரியர் முனைவர் ஜாஹிர் உசேன், இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் அப்துர் ரஹீம், எம் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் மன்சூர் அலி கான், சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், காயல் லெப்பை தம்பி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.ஓ. ஷாகுல் ஹமீது நன்றியுரை நிகழ்த்தினார். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
--- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us