மலேசியாவிலிருந்து அகில உலக யோகா சாதனையாளர் விருது தேர்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவிலிருந்து அகில உலக யோகா சாதனையாளர் விருது தேர்வு

செப்டம்பர் 15,2020 

Comments

இந்தியாவில் உள்ள பதஞ்சலி யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 2020 ஆம் ஆண்டிற்கான யோகா சாதனையாளர்களுக்கான தேர்வு விண்ணப்பங்களை உலகம் முழுவதும் உள்ள யோகா ஆசிரியர்களிடம் இருந்து பெற்றனர். அதில் மலேசியா நாட்டில் இருந்து2br1. சபா மாநிலம் சண்டாகாண் நகரை சேர்ந்த ஹேமாமாலினி சாமிநாதன் - யோகா ஸ்ரீ விருதிற்கும்2br2.. கெடா மாநிலம் சுங்கை பட்டாணி நகரை சேர்ந்த அமுதா கௌரப்பன் - யோகாபாரதி விருதிற்கும்2br3. விலாயா பெர்சகெட்டுவான் மாநிலம் கோலாலம்பூர் நகரை சேர்ந்த சிந்தாமணிஅருணாசலம் - யோகா பாரதி விருதிற்கும்2br4. சிலாங்கூர் மாநிலம் காஜாங் நகரை சேர்ந்த வாசுகி ராமன் - யோகா ஜோதி விருதிற்கும் தேர்வு பெற்றுள்ளனர்.2brபாரதி கண்ட புதுமைப் பெண்களாக யோகா துறையில் ஆண்களூக்கு நிகராக அகில உலக யோகா போட்டியில் பங்கு பெற்று பதக்கங்கள் பெற்றதாலும், தேசிய அளவில் யோகா போட்டிகளை மலேசிய நாட்டில் நடத்தி சாதனை புரிந்ததற்காகவும், அகில உலக யோகா மாநாட்டில் பங்கு பெற்றதற்காகவும்,அதிக அளவில் யோகா போட்டியில் போட்டியாளர்களை பங்கெடுக்க ஏற்பாடு செய்ததற்காகவும் இவர்கள் இந்த கௌரவ விருதிற்கு தேர்வு பெற்றுள்ளனர்.2brஇவ் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள அகில உலக இணைய தள கூட்டதில் வழங்கப் படுகிறது. இவ்விருதிற்கு தேர்ச்சி பெற்றவர்களை அகில உலக யோக சம்மேளன ஆசிய இயக்குனர் ராதா கிருஷ்ணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.2brபதஞ்சலி யோகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 2020 ஆம் ஆண்டிற்கான Yoga Acharya award ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு இரண்டாவதாக வழங்கப்பட்டுள்ளது. யோகா போட்டி அஷ்டாங்க யோகா அமுதா வென்றார். ஷிவ் தர்ஷன் யோகா வித்யாலயா சார்பில் சுவாமி சிவானந்த சரஸ்வதி ஜெயந்தி முன்னிட்டு யோகா போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டியாளர்களின் மலேசிய கெடா பகுதியை சார்ந்த அஷ்டாங்க யோகா பயிற்சி மையத்தின் யோகா ஆசிரியர் அமுதா கலந்துகொண்டு பெண்களுக்கான பிரிவில் CHAMPIONS OF CHAMPIONS பட்டம் வென்றார்.2br– நமது செய்தியாளர் வெங்கடேசன்


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us