உலகத் தமிழ் பாராளுமன்றம் உதயம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உலகத் தமிழ் பாராளுமன்றம் உதயம்

செப்டம்பர் 16,2020 

Comments

  உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு பல பிரிவுகளை உருவாக்கி வருகிறது. அதில் அரசியல் பிரிவில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், கனடா, பப்புவா நியூ கினி கயானா போன்ற எட்டு நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் இன்றைய தேதியில் 147 பேர்களும், மத்திய அமைச்சர்களாக 14 பேர்களும் உள்ளனர்.


 
உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவும் அரசியல் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகள் பெறவும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளை அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தீர்வு காணவும் இவ்வமைப்பின் நோக்கமாகும். அரசியலில் பல்வேறு கொள்கைகள் இருந்தாலும் தமிழராய், பொதுப் பிரச்சினைகளை தீர்வு காணவும், பல்வேறு நாடுகளுக்கு ஸ்டேட் விசிட் செய்து அரசாங்கங்களுக்கு அனுசரணையோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்வு காணவும், பல்வேறு நாடுகளுடன் இறையாண்மை உடன் நல்லுறவு ஏற்படுத்தவும் இவ்வமைப்பு செயல்படும். 

இவ்வமைப்பிற்கு பன்னாட்டு ஒருங்கிணைப்பாளராக செல்வகுமார், இலங்கைக்கு சுப்பிரமணிய தியாகுவும், சிங்கப்பூருக்கு ராஜேந்திர பூபதியும், மலேசியாவிற்கு தீனதயாளன், மொரிஷியஸ்க்கு நித்யானந்தாவும், கனடாவிற்கு ஆலன் டீன் மணியம், கயானா மற்றும் பப்புவா நியூ கினிக்கு ஜனகன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளனர். உலகில் 13 கோடியே 60 லட்சம் தமிழர்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 2% உள்ள தமிழர்களின் அனைத்து நாடுகளில் அரசின் பிரதிநிதி பெற்று மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமுதாயமாக மாற்ற, முன்னெடுக்க வேண்டும் எனவும், விரைவில் எட்டு நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இணையவழியில் ஜூம் பொது விவாதம் ஒன்றை நடத்தவுள்ளோம் என உலகத் தமிழ் பாராளுமன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவருமான செல்வகுமார் தெரிவித்தார்.

– செல்வகுமார் (தலைவர், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு)



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us