"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் 35 வது மாதாந்திர நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

"வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் 35 வது மாதாந்திர நிகழ்ச்சி

செப்டம்பர் 16,2020 

Comments (1)

சிங்கப்பூர் "வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் 35 ஆவது மாதாந்திர நிகழ்ச்சி 12-09-2020 (சனிக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு ZOOM வழியாக நடைபெற்றது.வழக்கமாக, பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றுவரும் மாதாந்திர நிகழ்ச்சி, சமீபத்திய கொரோனா தொற்று காரணமாக இணையம் வழியாக நடைபெற்றது. ‘வாழ்க நிரந்தரம்’ என்ற தமிழ் வணக்கப் பாடலோடு வரவேற்பு தமிழன்னைக்கு. ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’என்ற பக்தி பாடலோடு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் சம்ரிதா. ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’ என்ற மற்றொரு பாடலோடு வந்தார் ஜோஷித். மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற இணையம் வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார் குமரவேல்.சிறுவர்கள் பங்கேற்கும் அங்கத்தில், காரைக்குடியில் இருந்து இணைந்த மாணவி ஷபா, ‘யார் மனத்தையும் புண்படுத்தக் கூடாது’ என்ற கதைவொன்றை வழங்கினார். அடுத்து வந்த மித்ரேஷ் மஹாபாரதத்தில் வரும் அர்ச்சுனன் வேடமேற்று உயிர்க்காக்கும் வரிகளை வழங்கினார். மஹாபாரதத்தில் வரும் கர்ணன் வாழ்க்கைப் பற்றி வழங்கினார் ஜோஷிகா. ஸ்ரீசரண் ‘நன்றி மறந்த பாம்பு’ என்ற தலைப்பில் கதை கூறினார். கல்வியின் பயன் பற்றிக் கூறினார் சமிக்ஷா. ராகித்யன் திருக்குறள் சிலவற்றை வழங்கினார். அடுத்து வந்த ஜீவஜோதிகா தமிழ் இலக்கியங்களில் உள்ள 96 வகை சிற்றிலக்கிய நூல் வகைகளை வழங்கினார். ‘அன்பிற்கு உண்டா அடைக்கும் தாழ்’ என்ற திருக்குறளை சிறு செயல்விளக்கம் மூலம் உண்மையான அன்பை அடைத்து வைக்க முடியாது என விளக்கினார் நிக்கிதா. ‘எனக்குப் பிடித்த உணவு’ என்ற தலைப்பில் சிறுதானியங்கள் கீரைகள் என பல உணவுகளின் பயன்பாட்டை விவரித்தார் ஜோஷித்.சிறுவர் அங்கத்தினைத் தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி “கண்டம்” என்ற தலைப்பில் அறிமுகவுரை வழங்கினார். தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் எவ்வகையில் பிரிக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கினார். படலம், காதை, கண்ணி என பல்வேறு கூறுகளை விவரித்தார்.தொடர்ந்து வந்த, மாணவி சரண்யா, மாணவர் பார்வையில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பற்றி சிற்றுரையாற்றினார். ‘சொல்லும் செயலும்’ என்னும் தலைப்பில் சிற்றுரையாற்றினார் ஆசிரியை மஹ்ஜபின். திருச்சியிலிருந்து கலந்துகொண்ட முனைவர் அமிர்தகடேஸ்வரர் ‘செல்லாத காசுகள்’ தலைப்பில் தமிழ் இலக்கியவாதிகள் கடைபிடிக்க தவறும் பல பிழையான சொற்களை விவரித்தார்.சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகமான புதுச்சேரி முனைவர் க.ரேவதி, “சங்க இலக்கியமும் அன்பின் ஐந்திணையும்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த செல்வராசு, திருச்சியிலிருந்து முனைவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர் சலீம், சென்னையிலிருந்து நாதமணி, காரைக்குடியிலிருந்து புலவர் இராம.வள்ளியப்பன்-தமயந்தி தம்பதியினர், சிங்கப்பூர் சசிக்குமார், நிகழ்ச்சி பற்றியக் கருத்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர். சிங்கப்பூரிலிருந்து ரமேஷ் தமிழ்க்கடவுள் முருகன் மீது பாடல்வொன்றை சிறப்பாக பாடினார். வாழ்வியல் இலக்கியப் பொழிலின் பொருளாளர் முனைவர் தேன்மொழியாள் அனைவருக்கும் சிறப்பு நன்றியுரைத்தார்.இணையம் வழி சிங்கப்பூர், இந்தியா, பிரான்ஸ், மலேசியா என பல்வேறு நாடுகளில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார் மருத்துவர் அன்னபூரணி.நிகழ்ச்சியின் காணொளியை முகநூல் வழியாக நேரலையாகவும் ஒளிபரப்பி வந்தனர் ஆசிரியை மஹாஜபீன் மற்றும் குமரேசன். இல்லத்தில் இருந்தபடி நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, குமரவேல் மற்றும் மருத்துவர் அன்னபூரணி அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்த சிறப்பான நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Krishna - Singapore,Singapore
17-செப்-202014:08:36 IST Report Abuse
Krishna நெறியளர்கள் நிகழ்ச்சியின் இடையே பல்வேறு தகவல்களை தொகுத்து வழங்கியது அருமை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us