பஹ்ரைனில் மோடிக்கு 70 குழந்தைகளின் 70-வது பிறந்தநாள் வாழ்த்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைனில் மோடிக்கு 70 குழந்தைகளின் 70-வது பிறந்தநாள் வாழ்த்து

செப்டம்பர் 18,2020 

Comments

மணாமா பஹ்ரைன்: பாரத பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 70 குழந்தைகள் பல்வேறு மொழிகளில் வாழ்த்து கூறும் நிகழ்வு நடைபெற்றது. பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுக்கும் நவ பாரதம் அமைப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. பஹ்ரைனில் வசிக்கும் இந்திய குழந்தைகள் தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, கொங்கனி, துளு, மராத்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பஞ்சாபி, பாக்ரி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் தங்களுக்கே உரிய மழலை மொழியில் ஒரே நேரத்தில் வாழ்த்து தெரிவித்த காணொளிகளை வெளியிட்டனர். தங்களது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டியும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நவ பாரதம் அமைப்பின் பொது செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் "நமது பாரத பிரதமர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியதோடும் பல்லாண்டு வாழ இறைவனை பிராத்திக்கிறோம்" என்று கூறினர். இந்நிகழ்வை உலகெங்கும் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2019-ல் மோடி பஹ்ரைனில் சுற்றுப்பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.– நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us