பத்துமலையில் கருடன் சிலை திறப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பத்துமலையில் கருடன் சிலை திறப்பு

செப்டம்பர் 20,2020 

Comments

மலேசியாவின் பத்துமலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில் அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ள, பகவான் மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் சிலை திறக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் இந்த கருடன் சிலை திறக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்தது. முன்னதாக கருடன் சிலை திறப்பு மற்றும் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடாசலபதி பெருமாளுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பெருமாளின் தரிசனத்தை பெற்றுச் சென்றனர். மாலையில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து கருடன் சிலை திறக்கப்பட்டது.இந்த சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மலேசியாவின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா ஆகியோர் விழாவில் சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள், கோவிந்தா கோஷம் முழக்கமிட்டபடி கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும், சுகாதார அமைப்பின் எஸ்ஓபி விதிகளை தவறாமல் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி பக்தர்களும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கருடன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.– நமது செய்தியாளர் வெங்கடேசன்


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us