எஸ்பிபி.,க்கு ஒரு ரசிகையின் கவிதாஞ்சலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

எஸ்பிபி.,க்கு ஒரு ரசிகையின் கவிதாஞ்சலி

செப்டம்பர் 26,2020 

Comments

ஒவ்வொரு (கண்ணீர்) துளியிலும் உன் முகம் தெரிகிறது
நீரின்றி அமையாது உலகு- இன்று
நீர் இன்றி?
சுப்ரபாதத்தில் எழுப்பி- உன்
தாலாட்டில் உறங்கச் செய்தவரே!

யாரைய்யா நீர்?

யார் யாரோ எழுதிய கவிதைகளுக்கு

உயிர் கொடுத்த பிரம்மனைய்யா நீர்!

காதலை தென்றலாய்
காமத்தை நாசூக்காய்
நட்பை நாகரீகமாய்
பாசத்தை பக்தியாய்
பதின் வயதிலேயே பதவிசாய்
சொல்லிக் கொடுத்த நீர்-நம் உறவு,
பிரிவென்ற சொல்லே அறியாதது என
பெரிய பொய் கூறிவிட்டீரே!

உயிரில் கலந்து உணர்வில் மிகுந்து
ஒவ்வொரு அணுவிலும் பரவிய
வைரஸ் ஐயா நீர்!

இன்று பல காதல் உயிரோடு
இருக்க நீர் தானே காரணம்!

உமது பாடல் இல்லாத
வீடு,கோவில்,காடு,மலை
இனி என்னாகும்?

பல நூறு ஆண்டுகள் இந்த மண்ணில்
காற்றாய் மழையாய் அணுவாய்- நீர்
வாழ்வீர்! நான் மறைந்தாலும்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us