அமெரிக்காவில் வில்வித்தையில் அசத்தும் தமிழக வம்சாவளி சிறுவன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அமெரிக்காவில் வில்வித்தையில் அசத்தும் தமிழக வம்சாவளி சிறுவன்

செப்டம்பர் 26,2020 

Comments

  அர்ஜுன் ராஜ், அமெரிக்காவின் இல்லினாய் ( Illinois) மாகாணத்தில் சிகாகோவில் வசிக்கும் 10 வயதான இச் சிறுவன் மாகாண அளவிலான 'OLYMPIC RECURVE BOWMEN-100 FEET' போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளான். இதன் அடுத்த படிநிலை போட்டிகள் அமெரிக்க நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ளது.


அர்ஜுன்ராஜ் அதிலும் வெற்றி பெரும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. அர்ஜுன்ராஜ் சிகாகோ மாகாண ' BOW HUNTERS CLUB' மூலம் கடந்த 3 வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறான். அர்ஜுன்ராஜின் தந்தை ராஜசேகர், தாயார் லாவண்யா முறையே கோவை மற்றும் சேலத்தை சேர்ந்தவர்கள். அர்ஜுன்ராஜின் தாத்தா பாட்டிஆகியோர் தற்போது கோவை கணபதியில் வசித்து வருகிறார்கள்.


இந்திய இதிகாசங்களான மஹாபாரதம் மற்றும் ராமாயணம் கதை படிப்பதில் ஆர்வம் உள்ள அர்ஜுன், மஹாபாரத கதாபாத்திரம் அர்ஜுனன் மேல் உள்ள பற்றும் பிரமிப்பும் தன்னுடைய வில்வித்தை ஆர்வத்திற்கு ஒரு காரணமும், தூண்டுகோலும் என்று கருதுகிறான்.



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us