உலகத் தமிழர்களுக்கு எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் தீர்வு காண்போம்’ - உலகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உலகத் தமிழர்களுக்கு எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் தீர்வு காண்போம்’ - உலகத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து

செப்டம்பர் 27,2020 

Comments (1)

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஒருங்கிணைப்பில் உலகத் தமிழ் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டு அதன் முதல் இணையவழி கூட்டம் உலக அரசியலில் தமிழர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் 26-09-2020 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. தொடக்கத்தில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்று நோக்க உரை ஆற்றினார். ஊடகவியலாளர் ஜான் தன்ராஜ் இணைப்புரை ஆற்றினார்.


இந்நிகழ்வில் விஐடி வேந்தர் டாக்டர் விசுவநாதன் கலந்துகொண்டு உலக தமிழ் பாராளுமன்றத்தின் லட்சனையை வெளியிட்டு சிறப்பு பேருரை ஆற்றினார். அப்பொழுது, நான் 1967 பேரறிஞர் அண்ணாவால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டேன், அதேபோல் 1971 கலைஞர் அவர்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அப்பொழுது கோலாலம்பூர் உலக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அனைத்து நாட்டில் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் ஏற்பட்டது. இன்றைக்கு உலகம் முழுவதும் 147 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் தமிழர்களுடைய நலத்திற்காக ஒற்ற கருத்துடன் ஒன்றிணைய வேண்டும், ஏனென்றால் உலகத்தில் 7000 மொழிகள் இருக்கின்றன. இவற்றுள் சிறப்பு வாய்ந்த மொழியாக. தமிழ் மொழியும், சீன மொழியும் அதிக மக்கள் பேசக் கூடியவர்களாக இருக்கின்றன.


இதில் சீன மொழியை விட மூத்த மொழியாக, பழமைவாய்ந்த மொழியாக, செம்மொழியாக இருப்பது தமிழ்தான். அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவியிருக்கிறார்கள். அவர்களின் நலனுக்காக எந்த நாட்டில் தமிழின மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உலகத்தமிழர்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அதை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் இந்த உலகத் தமிழ் பாராளுமன்றம் துவக்கப்படுகிறது. இதில் உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ,தமிழ் நலனுக்காக பாடுபடும் இந்த முயற்சியை வெற்றியடையச் செய்ய வேண்டும். இந்த உலகத் தமிழ் நாடாளுமன்றம் எதிர்காலத்தில் தமிழர் நலனுக்காய் உழைக்கின்ற சிறப்பான அமைப்பாகும் உருவாக்கப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.


மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா பேசுகிற போது, சோழன் கடாரம் கொண்டான் ஆட்சி புரிந்த மண்ணிலிருந்து பேசுகிறேன் என்பது பெருமை. மலேசியாவில் தமிழுக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் தரப்படுகிறது. என்னை பொறுத்த வரையிலும் தமிழனாக வாழவேண்டும், செத்தாலும் தமிழனாக வேண்டும். எனவே இன்று தொடங்கப்படுகிற உலகத் தமிழ் பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என பேசினார்.


இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாரதியார் சொல்வதுபோல சட்டசபை செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாரதியார் அவர்களின் கருத்து. அரசியல் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காட்டுகிற ஒரு அமைப்பாக இருக்கிறது. எனவே கல்வியிலும் அரசியலிலும் பெண்கள் அதிகளவில் இருக்க வேண்டும். உலகத் தமிழ் பெண்கள் அதிகமாக அரசியலுக்கு வருவதற்கு ஒரு தூண்டுகோலாக இந்த உலகத் தமிழ் பாராளுமன்றமும் பிறக்கும் என்று நம்புகிறேன். என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.


இலங்கையைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் பேசுகிற பொழுது, இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், இலங்கை பாராளுமன்றம், இங்கே 47 தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம். 125 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 35% தமிழ் உறுப்பினர்கள் இருக்கிறோம்.. 150 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் இவற்றுள் இலங்கையிலிருது புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள்தான் அதிகம். நாங்கள் எல்லாம் வேறு மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழர்கள் உணர்வோடே வாழ்கிறோம்.


இலங்கையில் அரசியல் ரீதியாக பிரச்சனை என்றால் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என இன்றைக்கு உள்ள அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள். இதை தமிழர்கள் என்ற கருத்தோடு எதிர்க்க வேண்டும். இந்த சூழல் உருவாக்கப்படுகின்ற உலகத் தமிழ் பாராளுமன்றம் இப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் அந்த நாடுகளில் ஏற்படுகிற பிரச்சினைகளும் உரத்த குரல் கொடுக்க வேண்டும் என வேண்டி. என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.


கனடா நாட்டைச் சேர்ந்த கேரி ஆனந்தசங்கரி பேசும்போது உலகெங்கும் வாழ்கிற தமிழர்களின் நலனுக்காய் செயல்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைக்கும் இந்த மாபெரும் முயற்சியை பாராட்டுகிறேன். இந்த உலகத் தமிழ் பாராளுமன்றம் உலகத் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். பண்டைய தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால் நாம் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறோம். அவ்வாறு இல்லாமல் சேர்த்து பயணித்து இருந்தால் ,உலகத்தில் பெரும் பகுதியை ஆட்சிசெய்த இனமாக தமிழினம் இருந்திருக்கும்.


எனவே நாம் இனியாவது ஒற்றுமையாக இருப்போம் .தமிழ் மொழி இருந்தால்தான் நாம் தமிழர்களாக இருக்க முடியும் எனவே தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கின்ற கடமை நம் அனைவருக்கும் உண்டு. இந்தப் பணியை உலகத்தமிழ் பாராளுமன்றம் சிறப்பாக செய்கின்றது என நம்புகிறேன் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.


பப்புவா நியூ கினி நாட்டைச் சார்ந்த சசிதரன் பேசுகிற போது, உலக நாடுகளில் விரவிக் கிடக்கிற தமிழர்கள் கல்வி பொருளாதாரம் அரசியல் போன்றவற்றில் அவர்கள் வாழ்கிற நாட்டில் முழு உரிமை பெற்று இருக்க வேண்டும்.அதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட உருவாக்கப்பட்டுள்ள உலக தமிழ் நாடாளுமன்றம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்று பேசினார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் ,பேசும்பொழுது உலக தமிழர்களுக்காய் பேசுகிற இந்த வேளையில் இந்தியாவில் தமிழர்கள் ஒற்றுமையாகவும் வலுவாகவும், அரசியல் அதிகாரத்தில் வலுவாகவும் இருந்தால் தான் உலக தமிழர்களை பற்றி நாம் பேசுவது சரியாக இருக்கும். அந்தந்த நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொண்டு வாழ்கிற சூழல் ஏற்படும். அதற்கு இந்தியாவில் வாழுகின்ற தமிழர்கள் கருத்தியலோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது ஒரு வரலாற்றுத்தேவை. சீனா உலக அளவில் மக்கள் தொகையில் மாத்திரமல்ல பொருளாதாரத்திலும் ஒரு வளர்ந்த நாடாக இருக்கிறது அதற்கு காரணம் சீனு மொழி பேசக் கூடியவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டு மக்களுக்காக சீனர்களுக்கு ஒன்றாக இணைந்து செயல்படுகிற வழக்கம் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் சீனா உலக அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இருக்கிறது. அதேபோல உலகத்தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழர் என்று ஒற்றுமையோடு தமிழர் நலனுக்காய் ஒத்த கருத்தோடு பாட வேண்டும். குறிப்பாக ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள் தாயகம் திரும்பி வாழ கனவுகளோடு இருக்கிறார்கள். அந்த கனவு நிறைவேற வேண்டுமென்றால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு ஈழத்தில் இருக்க வேண்டும். இன்றைய நிலையில் பாதுகாப்பு இருக்கிறதா என்றால் இல்லை. நெருக்கடி தான் இருக்கிறது. எனவே உலகத்தமிழ் பாராளுமன்றத்தின் மூலம் தமிழர் நலனுக்காய் உலக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.


இறுதியாக பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் , உலகளாவிய தமிழர்களை இணைக்கும் முயற்சியில் உலகளாவிய நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் உலகத்தமிழ் பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட செய்தியை கேட்டு நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இதை ஒருங்கிணைத்துக் கொண்டு இருக்கிற செல்வக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட உலகளாவிய தமிழர்களை இணைக்கிற அமைப்பு அவசியம் தேவை என்றால் அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அவர்கள் சந்தித்து வருகிற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில தீர்மானங்களை நிறைவேற்றி நமது கருத்துக்களை அந்தந்த அரசுக்கு தெரிவிக்க வாய்ப்பு இதன் மூலம் நடக்கும் என்று நான் கருதுகிறேன், குறிப்பாக இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சந்தித்து வருகிறேன் பிரச்சினைகளில் தமிழ்நிலம் குறித்தும் அரசியல் குறித்தும் நிறைய பேச வேண்டி இருக்கிறது அதைப் பற்றி உங்களுடைய கருத்துகளை அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டால் இங்குள்ள தமிழ் மக்களின் நிலைமை வாழ்வாதாரம் மாறும் என்று நான் நம்புகிறேன் அதுபோல உலக நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அவரவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த உலகத் தமிழ் பாராளுமன்றம் செயல்பட போவதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


நிறைவாக உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் கனடா நாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆலன்டின் மணியம் நன்றியுரை கூறினார்.

– செல்வக்குமார் (தலைவர்,உலக தமிழ் வம்சாவளி அமைப்பு)

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
TamilArasan - Nellai,India
29-செப்-202009:51:15 IST Report Abuse
TamilArasan இங்கு குறிப்பிட பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரையும் விட பலம்பொருந்திய பொறுப்பில் உள்ளவர் அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தல் போட்டியில் உள்ள கமலா ஹரிஷ் - வரும் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக கூட வாய்ப்புள்ளது - ஆனால் நம் ஊர் திராவிட கழக கண்மணிகள் அப் பெண்ணை மனுஷியாக கூட அங்கீகரிக்க மாட்டார்கள் - கேட்டால் .. என்பார்கள் இந்த கருப்பு சட்டை கயவர் கூட்டம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us