யார் வந்து துயில் எழுப்புவார்?
ஆயர்பாடி மாளிகையில்
மாயக் கண்ணனை துயில் எழுப்பினாய்..
தூங்காதே தம்பி தூங்காதே என்று
இளம் தலைமுறையினருக்கு விழிப்பூட்டினாய்..
உறங்காத விழிகளை தென்றலாய்
தாலாட்டினாய்...
ஊர் போகும் பயணங்களில்
வழித்துணையாய் வந்தாய்..!
இளம் நெஞ்சங்களின் கனவுகளில்
ஆயிரம் நிலவாய்.. ஜெலித்தாய்
காதலாய் கசிந்துருகினாய்..
பாசமாய் இசையமுதூட்டினாய்
கண்ணீர் மல்கும் கவலையிலும்
கானங்களாய் காதுகளில் ஒலித்தாய்..!
இசைவானில் சிறகு விரித்த உன் குரலை
காற்றலையில் மிதக்க விட்டுவிட்டு
மெளனராகம் இசைத்தபடியே..
நித்திரையில் ஆழந்த உன்னை -இனி
யார் வந்து துயில் எழுப்புவார்?
- தினமலர் வாசகர் திருமலை சோமு
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.