ஷார்ஜா எம்.டி.எஸ். நிறுவனம் நடத்திய ஹைக்கூ சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜா எம்.டி.எஸ். நிறுவனம் நடத்திய ஹைக்கூ சிறப்பு நிகழ்ச்சி

அக்டோபர் 01,2020 

Comments

ஷார்ஜா : ஷார்ஜா எம் டி எஸ் ஈவெண்ட்ஸ் மேனேஜ்மெண்ட், மேனேஜ்மெண்ட் கன்சல்டண்ட்ஸ் நிறுவனம் தடம் பதிக்கும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் என்ற சிறப்பு நிகழ்ச்சி 25.09.2020 வெள்ளிக்கிழமை காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.டி.எஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இலக்கியங்களில் ஹைக்கூ ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த துறையில் ஆர்வமுள்ளவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார். சிறப்பு விருந்தினராக கவிச்சுடர் கா. ந. கல்யாணசுந்தரம் பங்கேற்று தடம் பதிக்கும் தமிழ் ஹைக்கூ கவிதைகள் என்ற தலைப்பில் பேசினார். பல்வேறு நபர்களின் ஹைக்கூ படைப்புகள் குறித்து நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் முருகேஷ், முதுவை ஹிதாயத், காயல் ரிஃபாயி சுல்தான், ஸ்ரீதேவி, கீழக்கரை அபுல் ஹசன், சவுதி அரேபியா பாக்யலட்சுமி, முனைவர் ஹேமலதா, சிங்கப்பூர் பார்த்திபன், ஆஸ்திரேலியா முருகபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் முதுகுளத்தூர்.காம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. -- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us