பிரான்சில் 19 ம் ஆண்டு கம்பன் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் 19 ம் ஆண்டு கம்பன் விழா

அக்டோபர் 01,2020 

Comments

  பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் 19 ம் ஆண்டு கம்பன் விழா செப்.,27 அன்று வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. மங்கல விளக்கேற்றலுடன் துவங்கிய இவ்விழாவில், கிருபாபரணன் சிவபாதசுந்தரம், திருமதி.மணியன் செல்வி இணையர் தமிழிசை முழங்கினர். பாவலர் பயிலரங்க மாணவ மாணவியரின் இறை வாழ்த்தும், தமிழ்த்தாய் வாழ்த்தும் தொடர்ந்து நடைபெற்றது. பாவலர் நெய்தல் நாடன் வரவேற்புரையாற்றி, விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.பாரீசு பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மருத்துவர் த.சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். பிறகு 19 ம் ஆண்டு கம்பன் விழா மலர் வெளியிடப்பட்டது. பின்னர் பாட்டரசர் கி.பாரதிதாசன் எழுதிய 'மார்கழித் திங்கள்' என்ற கவிதை நூலை செயமாமல்லன் இலிங்கம் வெளியிட, திருமதி.செயசீலன் பெற்றுக் கொண்டார். பாரதிதாசனின் மற்றொரு படைப்பான 'வெண்ணிலவே...வெண்ணிலவே' என்ற கவிதை நூலை திருமதி.போர் என்செல்வம் வெளியிட, பாவலர் கவிப்பாவை பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் அ.நாகராசன் மற்றும் தமிழ்நெஞ்சம் அமின் ஆகியோருக்கு கம்பன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆழ்வாரும் கம்பரும் என்ற தலைப்பில் பாட்டரசர் கி.பாரதிதாசன் சிறப்புரையாற்றினார். நிறைவாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


– கி.பாரதிதாசன் (தலைவர், பிரான்சு கம்பன் கழகம்)



Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us